உருளைக்கிழங்கு அவல்
Page 1 of 1
உருளைக்கிழங்கு அவல்
காலை வேளையில் குழந்தைகளுக்கு சற்று ஆரோக்கியமாகவும், சுவையாகவும், சமைத்து தர வேண்டும் என்று நினைத்தால், அப்போது அவர்களுக்கு பிடித்த அவலை வைத்து, விருப்பமான காய்கறிகள் சிலவற்றை சேர்த்து, ஒரு வித்தியாசமான ரெசிபியை செய்து கொடுக்கலாம். இப்போது அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
அவல் - 2 கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கியது)
வேர்க்கடலை - 10
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
மிக்ஸர் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கடலைப் பருப்பு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் வதங்கியதும், அதில் வேர்க்கடலையை சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பிறகு அதில் அவலை போட்டு, நன்கு கிளறி, 4-5 நிமிடம் வேக வைத்து, மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து கிளறி, பின் உப்பு போட்டு பிரட்டி, மூடி போட்டு, 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைத்து இறக்க வேண்டும்.
இப்போது அருமையான உருளைக்கிழங்கு அவல் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லி மற்றும் மிக்ஸர் தூவி அலங்கரித்து பரிமாற வேண்டும்.
குறிப்பு: வேண்டுமெனில் இதில் விருப்பமான காய்கறிகளை வேக வைத்து, சேர்த்து சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum