தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குபேர யோகங்கள் அறிவோமா?

Go down

குபேர யோகங்கள் அறிவோமா? Empty குபேர யோகங்கள் அறிவோமா?

Post  amma Sat Jan 12, 2013 6:29 pm



சனி விரலைவிட சூரிய விரலாம் மோதிர விரல். நீண்டு இருந்தால் குபேரனது அருள் கிடைக்கும் என்று ரேகை சாஸ்திரம் உண்டு. ஜாதக அலங்காரம் என்ற பழங்கால ஜோதிட நூலில் 333-ம் பாடல் குபேர யோகம் ஒரு மனிதனுக்கு எப்படி வரும் என்று குறிப்பிட்டுள்ளதைப் பாருங்கள்.

பிள்ளை அனுசம் அகபதியின்
பின்பாகம் அவிட்டந் தனில்சேயும்
துள்ளும் சென்மம் ஒரு பத்தில்
சூழ்ந்தே பரிதி உறவதனைத்
தெள்ளு மதியம் குரு நோக்கில்
செறி மூன்றைந்தின் கிரக மிலாது
தள்ளி இருக்கில் குபேரனைப் போல்
தனத்துக் கதிபனெனச் சொல்வாய்.

அஸ்வினி அனுஷம், அவிட்டம் ஆகிய நட்சத்திரம் ஒன்றின் 4-ம் பாதத்தில் செவ்வாய் நிற்க வேண்டும். லக்னம் அல்லது 10-ல் சூரியன் நிற்க வேண்டும். பிறகு செவ்வாயையும் சூரியனையும் சுபரான குரு சந்திரன் பார்க்க வேண்டும்.

தனலாப ஸ்தானத்திற்கு மாரகத்தானங்களை 3, 5-ம் இடங்களில் கிரகங்கள் நிற்கக்கூடாது. இந்த அமைப்பு உள்ள ஜாதகர்கள் பல கோடிகளின் அதிபர்களாவர். கடக லக்னத்திற்கு அனுஷம் 4ம் பாதத்தில் செவ்வாய் நிற்க, 10ல் சூரியன் உச்சமாகி சந்திரன் 4-ல் நின்று சூரியனைப் பார்க்க 9-ல் குரு அமர்ந்து செவ்வாயைப் பார்க்க குபேர யோகம்.

சிம்மத்திற்கு அஸ்வினி 4-ல் செவ்வாய் நின்று லக்னத்தில் சூரியன் நிற்க குரு 5-ல் ஆட்சியாகி இருவரையும் பார்க்க சந்திரன் 7-ல் நின்று சூரியனைப் பார்க்க குபேர யோகம். மேஷ லக்னத்திற்கு அவிட்டம் 4ல் செவ்வாய் நிற்க துலாச்சந்திரன் சூரியனை நோக்க சிம்ம குரு, சூரியன் செவ்வாயை பார்க்க பல கோடிகளுக்கு அதிபதி ஆவார்.

விருச்சிக லக்னத்திற்கு அனுஷம் 4ல் செவ்வாய் நின்றிட 10ல் சூரியன் ஆட்சியாகி 4ல் சந்திரன் நின்று சூரியனைப் பார்க்க 5ல் குரு அமர்ந்து செவ்வாயைப் பார்க்க வாழ்வில் உயர்ந்த குபேர யோகம். மேஷ லக்னத்திற்கு அவிட்டம் 4-ல் செவ்வாய் நிற்க துலாச்சந்திரன் சூரியனை நோக்க சிம்ம குரு, சூரியன், செவ்வாயை பார்க்க பல கோடிகளுக்கு அதிபதி ஆவார்.

விருச்சிக லக்னத்திற்கு அனுஷம் 4-ல் செவ்வாய் நின்றிட 10-ல் சூரியன் ஆட்சியாகி 4-ல் சந்திரன் நின்று சூரியனைப் பார்க்க 5-ல் குரு அமர்ந்து செவ்வாயைப் பார்க்க வாழ்வில் உயர்ந்த குபேர யோகம். மீன லக்னத்திற்கு அஸ்வதி 4-ல் செவ்வாய் நிற்க 10-ல் சூரியன் நின்று மிதுன சந்திரன் சூரியனைப் பார்க்க ஜீவன குரு செவ்வாயைப் பார்க்க குபேர யோகம்.

கும்ப லக்னத்திற்கு அனுஷம் 4-ல் செவ்வாய் நின்று உச்ச சந்திரனால் பார்வையாகி, லக்ன சூரியன் சிம்ம குருவால் பார்வை பெற மிகப்பெரிய குபேர யோகம் வந்து கோடிகளில் புரள்வார்கள். குபேர யோகம் பெற முடியாத ஒரு சில கிரகங்களே மாற்ற மடைந்திருக்கும் ஜாதகர்கள் அதற்கான கிரக யோக வழிபாட்டை கண்டுபிடித்து செய்வதால் நிறைவான யோகம் பெற்று வாழலாம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum