கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்?
Page 1 of 1
கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்?
சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.ஒருசமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி, ஆறு நாட்கள் நடத்தினர்.
யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.
கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர்.
முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» கந்தசஷ்டி நிறைவு நாள் விரத முறை
» திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா : இரவு திருக்கல்யாணம்
» திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா : இரவு திருக்கல்யாணம்
» கந்தசஷ்டி நிறைவு நாள் விரத முறை
» ஐப்பசியில் தீபாவளி கொண்டாடுவது ஏன்?
» திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா : இரவு திருக்கல்யாணம்
» திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா : இரவு திருக்கல்யாணம்
» கந்தசஷ்டி நிறைவு நாள் விரத முறை
» ஐப்பசியில் தீபாவளி கொண்டாடுவது ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum