கந்தசஷ்டி நிறைவு நாள் விரத முறை
Page 1 of 1
கந்தசஷ்டி நிறைவு நாள் விரத முறை
முருகனுக்கு உகந்த விரதங்களில் கந்தசஷ்டி விரதமும் ஒன்று. இந்த சிறப்பு மிக்க சஷ்டி விரதம் 6 நாட்கள் நடைபெறும். கந்தசஷ்டி விரதம் திருச்செந்தூரில் முருகன் கோவிலில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விரதத்திற்கு பல நாடுகளிலிருந்தும் மக்கள் திருச்செந்தூருக்கு வருகின்றனர்.
கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படும் 6 நாட்களும் விரதமிருந்து முருகனை வேண்டிக்கொண்டால் வேண்டியவை அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருமணமாகாத கன்னிப்பெண்கள் இந்த விரதத்தை முறையாக கடைப்பிடித்தால் அடுத்த வருடம் சஷ்டிக்குள் திருமணம் நடக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
அதுபோல குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் கிடைக்க இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். 6 நாட்கள் சஷ்டி விரதத்தை முறையாக கடைப்பிடித்து கடைசி விரத நிறைவு நாளான கந்தசஷ்டி அன்று கோயிலுக்குச் சென்று முருகனுக்கு மாவிளக்கு இடுவர். முருகப்பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடுவர். மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர்நிலைகளிலோ நீராடவேண்டியது அவசியம். அன்று இரவு பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
மறுநாள் முருகன் கோயில்களில் நடக்கும் பாவாடை நைவேத்யத்தை தரிசனம் செய்தபின்னரே சாப்பிடவேண்டும் என்றும் கூறுவதும் உண்டு. "முன் செய்த பழிக்குத் துணை முருகா' என்னும் நாமம் என்பார் அருணகிரிநாதர். முருகப்பெருமானுக்குரிய சஷ்டி விரத நாட்களில் முடிந்தவரை "ஓம் முருகா!' என்று ஜபிப்பது நன்மை தரும். இதனால், புத்திரதோஷம் நீங்கி நல்ல அறிவும் அழகும் உள்ள குழந்தைகள் உண்டாகும். நம் பிறவிப்பிணி நீங்கி முருகனருள் எப்போதும் துணை நிற்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கந்தசஷ்டி நிறைவு நாள் விரத முறை
» பெண்கள் விரத நாள்
» பெண்கள் விரத நாள்
» பெண்கள் விரத நாள்
» பெண்கள் விரத நாள்
» பெண்கள் விரத நாள்
» பெண்கள் விரத நாள்
» பெண்கள் விரத நாள்
» பெண்கள் விரத நாள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum