தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முருகனின் 12 ஆயுதங்கள்

Go down

முருகனின் 12 ஆயுதங்கள் Empty முருகனின் 12 ஆயுதங்கள்

Post  amma Sat Jan 12, 2013 5:52 pm


முருகனின் 12 ஆயுதங்கள்

அசுரசேனைகளை அழிக்க முருகப் பெருமானுக்கு பல்வேறு ஆயுதங்கள் தேவைப்பட்டன. எனவே சிவபெருமான் முருகனை அழைத்து 12 ஆயுதங்களை உனக்கு தருகிறேன் என்று கூறி தனது உதவி அம்சமாக விளங்கும் மகாதேவன், அரன், ருத்திரன், சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விஜயன், வீமதேவன், பவோற்பவன், கபாலி, சவுமியன் என்ற ஏகாதச ருத்திரர்களையும் அருகில் அழைத்து அவர்களை தோமரம், த்வஜம், அஸி (வாள்) வஜ்ராயுதம், தனுசு பாணம், அங்குசம், கண்டாயுதம், கமலாயுதம், கோதண்டம், ஈட்டி, பரசு எனும் பதினோரு வகை ஆயுதங்களாக்கி முருகப் பெருமானுக்கு தந்தார்.

இவற்றோடு சக்தியின் அம்சமான சக்தி ஆயுதத்தையும் (வேலாயுதம்) தரச் செய்தார். இவ்வாறாக முருகப் பெருமானின் 12 கைகளுக்கும் 12 வகை விசேஷ ஆயுதங்கள் சிவசக்தியரால் தரப்பட்டன. முருகன் பூலோகத்திற்கு வந்து 12 தலங்களில் லிங்கம் அமைத்து, சிவசக்தியர்களை வணங்கி அந்த 12 ஆயுதங்களையும் பெற்றார்.

பிறகு சூரனையும் அவன் சகோதரர்களையும் போரிட்டு வென்றார். இவற்றில் சிக்கலில் சக்தியை வணங்கி சக்தி வேலை முருகன் பெற்றார். மற்ற 11 தலங்கள் திருப்பரங்குன்றம், பெருவேளூர், புள்ளிருக்கு வேளூர், திருவீழிமிழலை, கீழ்வேளூர், திருசேய்ஞலூர், கூந்தலூர், திருச்செங்காடு, திருப்பந்துறை, திருமுருகன்பூண்டி, திருமயிலாடி எனும் தலங்களாகும். இந்தத் தலங்களுக்கெல்லாம் சென்று சிவனையும் முருகனையும் வழிபட்டு முருகனின் திருவருளைப் பெறலாம்
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum