தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டென்சன் இல்லாம கூலா இருங்க, பிரசவம் எளிதாகும்!

Go down

டென்சன் இல்லாம கூலா இருங்க, பிரசவம் எளிதாகும்! Empty டென்சன் இல்லாம கூலா இருங்க, பிரசவம் எளிதாகும்!

Post  ishwarya Mon Feb 04, 2013 5:18 pm



பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தம் என்பது பெரும்பாலான தாய்மார்களுக்கு ஏற்படுவதான், குழந்தையை நோய் நொடியின்றி நன்றாக வளர்க்க வேண்டுமே என்ற கவலையே மனஅழுத்தத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் பிரசவத்திற்கு முந்தைய மனஅழுத்தம் பிரசவத்தையே சிக்கலாக்கிவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

எனவே எந்த சூழ்நிலையிலும் கவலையோ, மனஅழுத்தமோ ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை. எனவே சிக்கல் இல்லாமல் எளிதாக பிரசவம் நடக்க நிபுணர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

மென்மையான இசை

நமக்குள் ஒரு உயிர் இருக்கிறது என்ற எண்ணமே நம்மை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். எனவே டென்சன் ஆகாமல் கூலாக இருந்தாலே சுகப்பிரசவம் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

கர்ப்பகாலத்தில் மனதிற்குப் பிடித்த மென்மையான இசையை கேளுங்கள். அது கர்ப்பிணிகளுக்கும் நல்லது கருவில் உள்ள குழந்தைகளுக்கும் நல்லது. இது மனதை மனஅழுத்தமில்லாமல் மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்ள உதவும்.

இதமான வென்னீர் குளியல்

தினமும் உறங்கும் அடிவயிற்றில் விளக்கெண்ணைய் தடவி இளம் சூடான நீரில் குளிப்பதால் சருமம் தளர்ச்சியடையும் மனஅழுத்தம் மற்றும் உடல் சோர்வுகள் நீங்கும்.

நல்லா நடங்களேன்

நல்லா நடங்க. தினமும் காலையிலும் மாலையிலும் நடக்கவும். இவ்வாறு செய்வதால் உடல் சீரான நிலையுடனும் நெகிழும் தன்மையோடு மாறுவதால் சுகப் பிரசவம் எளிதாக இருக்கும். தினமும் சில சிறிய உடற்பயிற்சிகளை செய்யவும். இதனால் உற்சாகம் ஏற்படுவதோடு மனஅழுத்தம் நீங்கும்.

ஏழு மாதத்திற்கு பிறகு நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்கவும். கருப்பை பாதிப்பை நீக்கும் தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்கவும். அவ்வாறு அதிகமாக தண்ணீரை குடிப்பது கருப்பையில் நீரை தக்கவைத்து கொள்கிறது.

பழங்களைச் சாப்பிடுங்கள்

7 மாதங்களுக்குப் பின்னர் அன்னாசி, பப்பாளி, மாம்பழம் போன்ற பழங்களை சாப்பிட வேண்டும். இவற்றில் ப்ரோமிலெய்ன் அதிகமாக இருக்கிறது, இவை கருப்பை வாயில் ஏற்படும் பாதிப்பை நீக்கி மென்மையாக்குகிறது. ரத்த அணுக்களை சீராக்கும் மாதுளை பழத்தை தினமும் சாப்பிடவும். இது உங்கள் உடம்பில் மற்றும் உங்கள் குழந்தையின் உடம்பில் உள்ள இரத்த அணுக்களை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

கசாயம் குடிங்க

ஏழு மாதத்திற்கு பிறகு பாலில் சில பூண்டுகளைப் போட்டு கொதிக்க வைத்து குடிக்கவும். தினசரி ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க காய்ச்சி அதில் சீரகம், பனங்கல்கண்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து கசாயமாக குடிக்கலாம்.

பிரசவ வலி நேரத்தில் ஒரு ஸ்பூன் தேன் ஊற்றி அதில் சீரகத் தூள் கலந்து சாப்பிடவும். பிரசவம் எளிதாகும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள். வெந்தயம் கால் ஸ்பூன், அரிசி அரை ஸ்பூன், வெள்ளைப்பூண்டு 5 பல் இதனை நன்றாக குழைய வேகவைத்து களி போல செய்து சாப்பிடலாம். இது உடல் சூட்டிற்கும் நல்லது சுகப்பிரசவம் ஏற்படும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum