கோடை வெயிலுக்கு கூலா டிப்ஸ்
Page 1 of 1
கோடை வெயிலுக்கு கூலா டிப்ஸ்
அக்னி நட்சத்திரம் முடிஞ்சாச்சு ஆனாலும் அனல் தாங்கலையே என்று புலம்பும் நபரா நீங்கள்? கவலை வேண்டாம் கொளுத்தும் கோடையிலும் உங்கள் உடலை கூலா வச்சிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். மத்த சீசன் காலங்களில் எப்படியோ கோடையில் கண்டிப்பாக தினசரி தலைக்கு குளிங்க அப்பொழுதுதான் கோடை வெயிலை சமாளிக்க முடியும்.
சூரிய ஒளி நேரடியாக தலைமீது நேரடியாக படுவதால் உச்சி முதல் உள்ளங்கால் வரை சூடு ஏறுகிறது. எனவே தலைக்கு குளிப்பதன் மூலம் உடம்பில் உள்ள சூடு குறையும் உடலும் குளிர்ச்சியாகும். கண்களும் உடலும் புத்துணர்ச்சியோடு இருக்கும். கோடை காலத்தில் உடலின் உஷ்ணத்தை வெளியேற்றுவதில் களிமண்ணிற்கு முக்கிய பங்குண்டு.
இது கோடைகால கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது. கடைகளில் விற்கப்படும் முல்தானி மெட்டி எனப்படும் களிமண் வாங்கி அதை நன்கு குழைத்து முகம் மற்றும் சருமத்தில் வெயில் படும் இடங்களில் பேக் போடவும். காய்ந்த பின்னர் ஊறவைத்து கழுவ உடல் குளிர்ச்சியடையும் சருமம் பாதுகாக்கப்படும்.
கோடைகாலத்திற்கு ஏற்ற குளிர்ச்சி தரும் உணவுகளான வெள்ளரி, தர்பூசணி போன்ற தண்ணீர் சத்து நிறைந்த பழங்களையும், தண்ணீரையும் அதிகம் உட்கொள்வதன் மூலம் உடலில் நீர்சத்து பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» டென்சன் இல்லாம கூலா இருங்க, பிரசவம் எளிதாகும்!
» கோடை காலத்தில் உடலை குளிர்விக்க இதோ டிப்ஸ்!!
» வெயிலுக்கு இதமான வெள்ளரி
» வெயிலுக்கு பயந்து வெளிநாட்டுக்கு பயணமாகும் நடிகைகள்
» கோடையில மீன் தொட்டியை கூலா வைங்க!
» கோடை காலத்தில் உடலை குளிர்விக்க இதோ டிப்ஸ்!!
» வெயிலுக்கு இதமான வெள்ளரி
» வெயிலுக்கு பயந்து வெளிநாட்டுக்கு பயணமாகும் நடிகைகள்
» கோடையில மீன் தொட்டியை கூலா வைங்க!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum