தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளது ?

Go down

ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளது ? Empty ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளது ?

Post  meenu Sun Feb 03, 2013 11:56 am

ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளது ?
ஜோதிடத்தில் பத்து பிரிவுகள் உள்ளன அவைகளை பற்றி கீழே பார்ப்போம். வானசாஸ்திரம், மண்டேன்ஜோதிடம் , ஜோதிடம் , பிரசன்னஜோதிடம் ( ஆருடம் ) , எண்ஜோதிடம் , கைரேகை ஜோதிடம் ,ஒலி அலை ஜோதிடம் , சமுத்திரிக்க லட்சணம் ஜோதிடம் , கை எழுத்து ஜோதிடம் , வாஸ்து சாஸ்திரம் ஜோதிடம் , போன்ற பல பிரிவுகள் உள்ளன . வானசாஸ்திரம் ஜோதிடம் : இது வான் மண்டலத்தில் ஏற்படும் பல மாற்றங்களால் பூமியில் ஏற்படும் பருவநிலைகளின் மாற்றங்கள் , இயற்க்கை சீற்றங்கள் , தட்பவெப்ப நிலை மாற்றங்கள் , போன்றவற்றை பற்றி அறிய பயன்படுத்தபடுகின்றது. மாண்டேன் ஜோதிடம் : இது ஓர் நாட்டின் பொருளாதார நிலை , நாணய மதிப்பு அரசியல் நிலை ஏற்றுமதி இறக்குமதின் நிலை விலைவாசி கடன் , பொது மரணங்கள் போன்றவற்றை பற்றி பயன் படுத்தபடுகின்றது . ஜோதிடம் : ஓர் தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகள் சூழ்நிலைகள் அவன் பிறப்பு முதல் இறப்பு வரை ஏற்படும் பல சம்பவங்களைப் பற்றி அறிய பயன் படுத்தபடுகின்றது . எண் ஜோதிடம் : ஓர் தனி மனிதனின் பிறந்த தேதிக்கு தகுந்தார் போல் அவருடைய பெயர் எழுத்துக்களை மாற்றி அமைப்பதன் மூலம் அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளை பற்றி அறிய பயன் படுத்தபடுகின்றது . ப்ரஸ்ஸன ஜோதிடம்: ஓர் நபர் வந்து ஜோதிடம் பார்க்கும் நேரத்தில் அந்த நேரத்தில் இருக்கும் க்ரஹநிலையை வைத்து அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி அறிய பயன் படுத்தபடுகின்றது . கைரேகை ஜோதிடம் : ஓர் தனி நபரின் கைரேகையை வைத்து அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி அறிய பயன் படுத்த படுகின்றது . ஒலி அலை ஜோதிடம் : ஒருவரின் ஒலி அலைகளை மாற்றி அமைப்பதன் மூலம் அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி அறிய பயன் படுத்தபடுகின்றது சாமுத்திரிக்கா லெட்சனம் : ஒரவரின் முகமைப்பு வைத்தும் , உடலமைப்பு வைத்தும் அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி அறிய பயன் படுத்தபடுகின்றது. கைஎழுத்து ஜோதிடம் : ஒருவர் எழுதும் கை எழுத்தை வைத்து அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி அறிய பயன் படுத்தபடுகின்றது . வாஸ்து சாஸ்திரம் : ஒருவர் வசிக்கும் வீட்டின் அளவுகளை வைத்து அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி அறிய பயன் படுத்தபடுகின்றது . ஜோதிடதிற்குள் மேலும் பல உட்பிரிவுகள் உள்ளன
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum