தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கந்தன் கருணை # 2

Go down

கந்தன் கருணை # 2  Empty கந்தன் கருணை # 2

Post  ishwarya Fri Feb 15, 2013 1:05 pm

காணுதற்கு நல்ல கயிலையில்
ஈசனோடு உலக அன்னை
நல்ல பல யோசனைகள்
செய்யும் ஒரு காலை-
யாண்டும் மூவுலகமும்
வேண்டும் படி செல்லும்
மாமுனி நாரதர் - ஒரு
மாம்பழத்தோடு வந்தார்.(4 )

'இது காணுதற்கு அரிய கனி
ஈசன் உண்ணுதற்குரிய கனி '
என அந்த கலக முனி
பழத்தை பரமனிடம்
பணிந்துத் தந்தார்.(5 )

ஒரு மாங்கனியைக் கண்ட
இரு பிள்ளை கனிகள்
திரு முகங்கள் மலர
அதை பங்கிட்டு தரும்படி கேட்டனர்.(6 )

இதுவே தருணம் என பிரம்ம முனியும்
கனியை விள்ளாமல் கொள்ளுதலே முறை
என மெல்ல கலகம் தொடர்ந்தார். (7)

வெள்ளை பனி மலை வாழும் - அந்த
விடை ஏறும் வேந்தனும் மனதினில்
விளையாடும் எண்ணம் கொண்டு
"விநாயகா ! வேலவா !
வேண்டும் இந்த கனி உமக்கு எனில்
விரைவில் இந்த உலகம் முழுதும்
சுற்றி வருவீர் !
முதலில் வந்தவர் இதை
உங்களின் விருதாய்
உண்ண விருந்தாய் பெறுவீர்!" என்றார். (Cool

ஒரு தெய்வீக நாடகம்
மெல்லத் துவங்கியது .
(தொடரும்.... )

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum