தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சர்ப்ப தோஷ பரிகாரங்கள்

Go down

 சர்ப்ப தோஷ பரிகாரங்கள் Empty சர்ப்ப தோஷ பரிகாரங்கள்

Post  ishwarya Thu May 23, 2013 4:55 pm

* சர்ப்ப பூஜை: இந்த பூஜை செய்வதற்கென்று சில கோவில்கள் உள்ளன. இந்த கோயிலுக்கு சென்று வெள்ளியால் செய்த நாகத்தை வைத்து வழிபாடு செய்யலாம்.

* சர்ப்ப பிரதிஷ்டை: முடிந்தவர்கள் சர்ப்ப பிரதிஷ்டை (கருங்கல்) செய்து ஆலயத்தில் வைத்து வழிபடலாம்.

* சர்ப்பங்களுக்கு அபிஷேகம்: புற்று உள்ள கோயிலுக்கு சென்று பால் அபிஷேகம் செய்து, புற்றுக்கு பூஜைகளை செய்து வழிபடலாம்.

* விநாயக பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.

* ஆஞ்சநேயர் வழிபாடு செய்யலாம்.

* நரசிம்ம சுவாமி வழிபாடு மேற்கொள்ளலாம்.

* பிரம்மச்சாரிகளுக்கு வஸ்திரம் கொடுக்கலாம். அன்னதானம் செய்யலாம்.

* பெண்கள் சுமங்கலி பூஜை செய்யலாம்.

* கன்னிகைகளுக்கு பூஜை செய்து, நாகபஞ்சமி வழிபாடு செய்யலாம்.

* குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். பிரதோஷ வழிபாடு தொடர்ந்து செய்து வர அனைத்துவித தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதிகம்.

* மாதம் இருமுறை சஷ்டி விரதம் அனுஷ்டிக்கலாம். ஜோதிடர்களுக்கு தானம் தருதல், ஏழைப்பெண் திருமணத்திற்கு உதவுதல், கல்விக்கு உதவுதல் ஆகியவற்றை செய்யலாம்.

- இவ்வாறு தொடர்ந்து செய்து வழிபட்டு வந்தால் சர்ப்ப தோஷம், முற்றிலும் நீங்கி வாழ்வில் அனைத்துவித நன்மைகளும் பெறலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum