தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உண்ணாவிரதம் வெற்றி பெற நடிகர் விஜய் வாழ்த்து

Go down

 உண்ணாவிரதம் வெற்றி பெற நடிகர் விஜய் வாழ்த்து  Empty உண்ணாவிரதம் வெற்றி பெற நடிகர் விஜய் வாழ்த்து

Post  amma Fri Apr 05, 2013 5:21 pm



நடிகர் விஜய், படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியா போய் இருக்கிறார். உண்ணாவிரதம் வெற்றி பெற வேண்டும் என்று நடிகர் சங்க தலைவர் சரத்குமாருக்கு அவர் கடிதம் அனுப்பினார்.

அந்த கடிதத்தில், விஜய் கூறியிருப்பதாவது:–

‘‘தமிழ் உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனும் ஈழத்தமிழனுக்கு நடந்த கொடுமைகளை எண்ணி கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறான். அந்த உணர்வுகளை பதிவு செய்யும் விதத்தில், கலைஞர்களை ஒன்று திரட்டி, தங்கள் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

அந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு இருந்தும் தற்போது ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருப்பதால், கலந்து கொள்ள இயலாமல் இருக்கிறேன் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்றாலும், உண்ணாவிரத போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்றும், ஈழத்தமிழனுக்கு விடியல் பிறக்க வேண்டும் என்றும் இறைவனை வேண்டுகிறேன்.’’ இவ்வாறு அந்த கடிதத்தில் விஜய் கூறியிருக்கிறார்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum