தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கூடங்குளம் அணு உலையில் முன் அறிவிப்பு இல்லாமல் சோதனை ஓட்டம் நடத்துவதா? உதயகுமார் கேள்வி

Go down

கூடங்குளம் அணு உலையில் முன் அறிவிப்பு இல்லாமல் சோதனை ஓட்டம் நடத்துவதா? உதயகுமார் கேள்வி Empty கூடங்குளம் அணு உலையில் முன் அறிவிப்பு இல்லாமல் சோதனை ஓட்டம் நடத்துவதா? உதயகுமார் கேள்வி

Post  amma Thu Apr 04, 2013 6:33 pm



‘‘மக்களுக்கு முன் அறிவிப்பு கொடுக்காமல் கூடங்குளம் அணு உலையில் சோதனை ஓட்டம் நடத்துவது எந்த வகையில் நியாயம்?’’ என்று உதயகுமார் கூறினார்.

உதயகுமார் பேட்டி

கூடங்குளம் அணு விஞ்ஞானிகள் குடியிருப்பை கடல் வழியாக முற்றுகையிடும் போராட்டம் நிறைவு பெற்ற பின்னர், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–கடந்த 3 மாதங்களில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 பேர் மரணம் அடைந்து இருப்பதாக, அணுமின் நிலைய நிர்வாகமே ஒப்புக் கொண்டுள்ளது. இதுவே அணுமின் நிலையம் ஆபத்தானது என்பதற்கு போதுமானச் சான்று ஆகும்.அணு விஜய் நகரில் குடியிருப்பவர்களை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த போராட்டத்தை நடத்தவில்லை. அணுமின் உலைகளால், அங்கு வேலை செய்கிறவர்களின் குடும்பத்தினருக்கும் ஆபத்து இருக்கிறது என்பதை உணர்த்துவதற்காகவே இந்த முற்றுகை போராட்டத்தை நடத்தி இருக்கிறோம்.

எந்த வகையில் நியாயம்?

சில நாட்களாக அணுமின் நிலையத்தில் சோதனை ஓட்டம் நடத்தி வருகிறார்கள். மக்களுக்கு முன் அறிவிப்பு ஏதும் கொடுக்காமல் சோதனை ஓட்டம் நடத்துவது, எந்த வகையில் நியாயம்?சோதனை ஓட்டத்தின் போது டயர்களை எரிப்பது போன்ற துர்நாற்றம் வந்தது. காதை பிளக்கும் இரைச்சல் சத்தம் கேட்டது. தரமற்ற ரஷிய உதிரி பாகங்களைக் கொண்டு, கூடங்குளம் அணு உலை அமைக்கப்பட்டு இருப்பதுதான் இதற்கு காரணம் ஆகும்.ரஷிய நாட்டில் உள்ள ‘ஜியோபெடால்ஸ்’ என்ற நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட உதிரி பாகங்களைக் கொண்டுதான் கூடங்குளத்தில் அணு உலை அமைத்தார்கள். அந்த நிறுவனம் போலியான அணுமின் நிலைய கட்டுமான உதிரி பாகங்களை தயாரித்து இந்தியா போன்ற நாடுகளுக்கு சப்ளை செய்ததாக புகார்கள் எழுந்தன. தற்போது அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் மீது ரஷிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானத்தின் போதும், தற்போதும் தொழில்நுட்பத்தில் சில மாற்றங்கள் செய்து இருப்பதாக அணுசக்தி கழக முன்னாள் தலைவர் சீனிவாசன் தெரிவித்தார். என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டன, எதற்காக செய்யப்பட்டன? என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மிகப்பெரிய போராட்டம்

தமிழர்களை பரிசோதனை எலிகளாக மத்திய அரசும், அணுசக்தி துறையும் நடத்தி வருகிறது. ரஷிய அதிபரை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக இந்த மாதத்தில் கூடங்குளத்தில் மின்சார உற்பத்தி தொடங்கப்படும் என்று, பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். ஆனால், எதற்கும் உதவாத அணு உலை இது. எனவே அவசரப்பட்டு இயக்கினால் கூடங்குளத்தில் அசம்பாவிதங்கள் நேர வாய்ப்புள்ளது.கூடங்குளம் பகுதி மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல், அணுமின் நிலையத்தை செயல்படுத்த முற்பட்டால் அடுத்த கட்ட போராட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கும். உயிரை கொடுத்தாவது அணு உலையை இயக்க விடாமல் தடுப்போம்.

7–ந் தேதி ஆலோசனை

‘‘அணு உலை போராட்டத்துக்கு தேர்தலை பயன்படுத்துவது எப்படி?’’ என்ற தலைப்பில் வருகிற 7–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இடிந்தகரை கிராமத்தில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம்.அந்த கூட்டத்தில், தமிழ் ஈழத்துக்காக போராடி வரும் மாணவ கூட்டமைப்பினர், ஆதரவு அரசியல் கட்சியினர், மகளிர் குழுவினர், தொண்டு நிறுவனத்தினர், சமுதாய தலைவர்கள், ஊர் கமிட்டியினர் கலந்து கொள்கிறார்கள். அடுத்த கட்ட போராட்டம் பற்றியும் அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.இவ்வாறு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறினார்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சோதனை ஓட்டம்: விரைவில் மின் உற்பத்தி
»  சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிராகரிக்கிறோம்: உதயகுமார் பரபரப்பு பேட்டி
»  அணுஉலை சோதனை ஓட்டத்துக்கு எதிர்ப்பு: கூடங்குளம் விஞ்ஞானிகள் குடியிருப்பு முற்றுகை 300 படகுகளில் சென்று கடலோர கிராம மக்கள் போராட்டம்
» நீலகிரிக்கு மலை ரெயிலுக்கு 3-வது புதிய என்ஜின் சோதனை ஓட்டம்
»  கூடங்குளம் அணுஉலை செயல்பட சுப்ரீம் கோர்ட் அனுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum