தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சந்தானத்தின் ஆசை என்ன?

Go down

சந்தானத்தின் ஆசை என்ன?                      Empty சந்தானத்தின் ஆசை என்ன?

Post  ishwarya Mon Mar 25, 2013 6:14 pm



தமிழில் இந்த ஆண்டு வெளியான படங்களின் எண்ணிக்கையில் முக்கால்வாசி படங்கள் சந்தானம் நடித்து வெளியாகியுள்ளன. இதனால் இந்த ஆண்டை சந்தானம் ஆண்டு என்றே மாற்றி வைக்கலாமா என்று திரைத்துறை சிந்தித்து வருகிறது.

அவ்வளவு ஏன், இப்போதும் சந்தானத்தின் பையில் 10 படங்கள் ஒப்பந்தமாகியுள்ளன. இது பற்றி அவரிடம் கேட்கலாம் என்று நாம் சென்றிருந்தோம். ஆனால் அதைப் பற்றி அவர் அலட்டிக் கொள்ளவே இல்லை. ஏதோ வருகிறது. நடிக்கிறேன் என்ற அளவிற்கே உள்ளார்.

சரி இத்தனை படங்களில் நடிக்கிறீர்களே.. உங்களுக்கு என ஏதாவது ஒரு ஆசை உள்ளதாக இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டோம். அதற்கு அவர் சொன்ன பதில் எங்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

அதாவது, ஒரு படத்தில் 3 வேடங்களில் நடிக்க வேண்டுமாம். ஒன்று தியாகராஜ பாகவதர் காலத்து நடிகராகவும், நடுவில் கௌண்டமனி காலத்து நடிகராவும், மற்றொன்று தற்போதைய காலத்து இளைஞராகவும். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து செய்யும் காமெடி நிச்சயம் சிறப்பாக இருக்கும் என்று கூறுகிறார்.

விரைவில் சந்தானத்தின் ஆசை நிறைவேறும் என்று நம்புகிறோம். ஆனால் அது நடந்தால், மருத்துவமனைகளில் வயிற்றுவலிக்காக சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்றும் நினைக்கிறோம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum