தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் வழக்கில் நாளை தீர்ப்பு: தமிழக தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு

Go down

விஸ்வரூபம் வழக்கில் நாளை தீர்ப்பு: தமிழக தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு Empty விஸ்வரூபம் வழக்கில் நாளை தீர்ப்பு: தமிழக தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு

Post  ishwarya Sat Mar 16, 2013 6:18 pm


'விஸ்வரூபம்' படத்தில் தங்களின் மனதை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாக கூறி முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அப்படத்துக்கு 2 வாரங்கள் தமிழக அரசு தடை விதித்தது.


இதனை எதிர்த்து கமல் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நாளை இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று இரவு போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற திடீர் ஆலோசனை கூட்டம் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 'விஸ்வரூபம்' படம் தொடர்பாக அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்பட்டால் அதனை சமாளிக்க தயார் நிலையில் இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து சென்னையில் பிரச்சினை ஏற்படலாம் என்று கருதப்படும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டள்ளது. தமிழகம் முழுவதும் இதேபோன்று பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

'விஸ்வரூபம்' திரைப்படம் தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகும் என்று கமல் அறிவித்திருந்தார். இதன்படி படம் ரிலீசாகும் என்று அறிவித்திருந்தார். தியேட்டர்கள் முன்பும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலஹாசன் அலுவலகம் நீலாங்கரையில் உள்ள பண்ணை வீடு ஆகியவற்றின் முன்பும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். நாளை வரை இந்த பாதுகாப்பு நீடிக்கப்பட உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கர்நாடகாவில் பலத்த பாதுகாப்புடன் விஸ்வரூபம் ரிலீஸ்: 40 தியேட்டர்களில் திரையிடப்பட்டது
» நாளை தியேட்டர்களில்,இன்று தெருக்களில்...! விஸ்வரூபம் சினிமாவிற்கு ஏற்பட்டுள்ள கதி!
» 'விஸ்வரூபம்' நாளை மறுநாள் ரிலீஸ்: தியேட்டர்களில் இன்று முன்பதிவு துவங்கியது
» 'விஸ்வரூபம்' பட பிரச்சினை நாளை தீர்ப்பு: சமரசம் பேச நீதிபதி யோசனை
» கேரளாவில் படப்பிடிப்பு கார்த்தி, அனுஷ்காவுக்கு பலத்த பாதுகாப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum