தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரேம்ஜி எடுத்த பயங்கர முடிவு

Go down

பிரேம்ஜி எடுத்த பயங்கர முடிவு  Empty பிரேம்ஜி எடுத்த பயங்கர முடிவு

Post  ishwarya Mon Mar 04, 2013 6:07 pm

என்ன கொடுமை சார் இது மொக்கையை வைத்து ஒப்பேற்றிவரும் பிரேம்ஜி அமரன் படுபயங்கரமான முடிவொன்றை எடுத்திருக்கிறாராம். அந்த அதிர்ச்சிக்கு மனதைப் பழக்கப்படுத்த வேறு சில துணை அதிர்ச்சிகளை பார்ப்போம்.

எப்போதாவது நடிப்பு, எப்போதும் பார்ட்டி என்றிருக்கும் பிரேம்ஜி அவ்வப்போது யுவன் ஷங்கர் ராஜாவின் இசைக்கூடத்திலும் தென்படுவார். துணிச்சல் என்ற படத்தில் இவர் இசையமைக்கவும் செய்தார். இவரை இசையமைப்பாளராக்கியதை வைத்து துணிச்சல் என்று பெயர் வைத்ததாக அப்போது கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது. அதன்பிறகு சில படங்களுக்கு பிரேம்ஜி இசையமைத்தார். பிரேம்ஜி இசையமைத்ததாலேயே அதன் பெயர் நினைவில்லாமல் போய்விட்டது.

என்ன இருந்தாலும் சொந்த காசில் சூன்யம் வைப்பவர்கள் இருக்கிற இடம்தானே. மீண்டும் ஒரு படத்துக்கு பிரேம்ஜிக்கு அட்வான்ஸ் தந்திருக்கிறார்கள். பாருங்கள்... என்னமோ நடக்குது என்று நமக்கேற்படும் குழப்பத்தையே படத்தின் பெயராக வைத்திருக்கிறார்கள். விஜய் வசந்த் நடிக்கிறார்.

சரி, இப்போது கிளைமாக்ஸ் அதிர்ச்சி. இந்தப் படத்தின் பாடல்களை ஹிட்டாக்கிவிட்டே பார்ட்டி பக்கம் தலைவைப்பேன் என்று சூளுரைத்திருக்கிறாராம் பிரேம்ஜி. ஆ... பாரதிராஜா படத்தில் வர்ற மாதிரியே கடலும், காற்றும் அசையாமல் நிற்குதே...
பிரேம்ஜி, இசை, யுவன் சங்கர் ராஜா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum