தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பது?

Go down

ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பது? Empty ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பது?

Post  meenu Sat Feb 02, 2013 5:52 pm

ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பது?
நடப்பது எந்தக் கிரகத்தின் திசை, எந்தக் கிரகத்தின்
புத்தி என்பதை முதலில் குறித்துக் கொள்ளுங்கள். ஜாதகத்தில் அந்த தசா
நாதனும், அந்த புத்திநாதனும் ஒருவருக்கொருவர் 6/8 பொஸிசனில்
இருக்கக்கூடாது. அல்லது 1/12 பொஸிசனிலும் இருக்கக்கூடாது. இருந்தால் அந்த
திசையில் அந்த புத்தி நன்மையைச் செய்யாது. இதுதான் குறுக்குவழி ஃபார்முலா!
இதை வைத்து அதாவது இந்த ஃபார்முலாவை வைத்து, அடுத்தடுத்து வரப்போகும்
புத்திகளுக்கும் குறித்துக் கொண்டே வாருங்கள், உங்களுக்கு நல்ல நேரமும்,
கெட்ட நேரமும் பிடிபட்டு விடும். தசாபுத்திப் பலன்களைக் கொடுத்துள்ளேன்.
பார்க்க. 1ம் வீடு, 5ம் வீடு, 9ஆம் வீடு, 4ஆம் வீடு, 7ஆம் வீடு, 10ஆம் வீடு
ஆகிய வீட்டு அதிபதிகளின் தசா அல்லது புத்தி நடைபெற்றாலும், அவர்கள்
ஜாதகத்தில் வலுவாக இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். எல்லாவற்றையும் விட,
11ஆம் வீட்டு அதிபரின் தசா அல்லது புத்தி நடைபெற்றால், அவர் ஜாதகத்தில்
வலுவாக இருந்தால் மிக நல்ல பலன்கள் கிடைக்கும். ஜாதகத்தில் உச்சமாக உள்ள
கிரகங்களின் தசா அல்லது புத்தி நடைபெற்றாலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
நீசமாக உள்ள கிரகங்களின் தசா அல்லது புத்தி நடைபெற்றால் நல்ல பலன்கள்
கிடைக்காது. தசாபுக்திதான் முக்கியம். அதற்கடுத்தபடிதான் கோச்சாரப்
பலன்கள். கோச்சாரத்தில் (in transit) குரு பகவானின் சஞ்சாரம் முக்கியமானது.
குருவானவர் சந்திர ராசிக்கு 5ஆம் இடம், 7ஆம் இடம், 9ஆம் இடம், 11ஆம் இடம்
ஆகிய இடங்களில் வாசம் செய்யும் காலங்களில் நல்ல பலன்களைத் தருவார். 1ஆம்
இடம், 3ஆம் இடம், 6ஆம் இடம் 4ஆம் இடம் 8ஆம் இடம், 10ஆம் இடம் 12ஆம் இடம்
ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் குரு பகவான் நன்மை செய்ய
மாட்டார். மூன்றாம் இடச் சஞ்சாரத்தில் குரு பகவான் தீமையான பலன்களைத்தான்
நல்குவார். குருவின் 3ஆம் இட சஞ்சாரத்தின் தன்மையை விளக்கும் பாடல்
"கேளப்பா குருபதியும் மூன்றிலேறக் கெடுதிமெத்த செய்வானடா வேந்தன்தானும்
ஆளப்பா அகத்திலே களவுபோகும் அப்பனே அரிட்டமடா சிசுவுக்குத் தான் கூளப்பா
குவலயங்க ளெல்லாம் ஆண்ட குற்றமிலாகாந்தாரி மகனும் தானும் வீளப்பா வீமன் கை
கதையினாலே விழுந்தானே மலைபோல சாய்ந்தான் சொல்லே!" - புலிப்பாணி பாடல்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பிறந்த தேதியே தெரியாதவர்கள் எப்படி ஜாதகத்தை கணிப்பது? ஜோதிடம் கூறும் வழி!
» நல்ல நாள் நேரம் பார்ப்பது எப்படி?
»  ஒவ்வொரு தெய்வங்களுக்கும் வாகனங்கள் உள்ளது. அதில் தான் அவை பவனி வரும். பஞ்ச மூர்த்தி உலா சிவாலயங்களில் நடைபெறும் பொழுது, ஒரு சப்பரத்தின் மீது ரிஷப வாகனத்தை வைத்து சுவாமி, அம்மனை ஜோடித்து வைப்பர். மூஞ்சுறு வாகனத்தின் மீது விநாயகரின் உற்சவ விக்ரத்தை வைத்து
» அமங்கலியானாலும் தாயாரை வைத்து நல்ல காரியம் துவக்குவது சரியா?
» ‘அம்புலி’ படத்தின் நாயகியான சனம் lekhafoods.com என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள உணவுக்கான இணைய தளத்தின் விளம்பர படத்தில் நடித்திருப்பதை ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்த சனத்தை எப்போது சனங்கள் முன்பு காட்டுவார்கள் என்று காத்திருந்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum