மஞ்சளின் மகிமை
Page 1 of 1
மஞ்சளின் மகிமை
-கே.எஸ்.இராமலிங்கம்
பெண்கள் திருமணம் முடிந்தபின், மஞ்சள் பூசுவதும், மாங்கல்ய கயிற்றுக்கு மஞ்சள் பூசுவதும், மஞ்சளால் தயாரிக்கப்பட்ட குங்குமத்தைத் திலகமிட்டுக் கொள்வதும், கணவன் இறக்கும்வரை ஒரு பண்பாட்டுச் செயலாக வாழ்வதும் எத்தனை புனிதமான இடத்தில் மஞ்சள் உள்ளது என்பதையே காட்டுகிறது.
இத்தனை சிறப்புப் பண்புகளைப் பெற்ற மஞ்சள், உணவுப் பொருளாகவும், உணவுப் பொருளுக்கு சுவை, மணம் தருவதுடன், உணவுப் பொருள் கெட்டுப்போகாமல் பாதுகாப்பும் தருகிறது. மஞ்சளை மருந்தாக ஒவ்வொரு வீட்டிலும் நடைமுறைப்படுத்தினார்கள். தேர்ந்த மருத்துவர்கள் மஞ்சள் கலந்த மருந்து மூலம் எத்தனை கொடிய நோய்களையும் போக்கி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டியுள்ளனர்.
குடும்பத்தில் உள்ளவர்கள் அச்சமும், சந்தேகமும் இல்லாமல் பயிற்சியும் இல்லாமல் மஞ்சள் மூலம் பல பிணிகளைப் போக்க முடியும்.
மஞ்சள் கலந்த குழம்பு நல்ல மணம், நிறம் கொடுப்பதோடு, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் போக்குகிறது. இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது. கெடுதல் செய்யும் கிருமிகளையும் அழிக்கிறது. பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும்.
பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிரந்திப் புண்ணுக்கு, மஞ்சளை அரைத்துப் பூசினால், மிக எளிதாக நோய் நீங்கும். பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, சூதகச் சிக்கலுக்கு உள்ளுக்கு மஞ்சள் பொடி சாப்பிடுவதால், நல்ல பலன் கிடைக்கிறது.
மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும். மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.
மஞ்சளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு உடலில் தோன்றும் அனைத்து வகையான புண்களையும், புரையோடுதலையும் நீக்கிவிடலாம்.
குடல் நோய் எதுவாக இருந்தாலும், மஞ்சள் சூரணம் உட்கொண்டால், விரைவாகவும், நிரந்தரமாகவும் நோய் தீரும்.
மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல், துர்நாற்றத்தைப் போக்கிவிடும். மேலும், வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும். மஞ்சளை கஷாயமாக்கி, பிரசவமான பெண்களுக்குக் கொடுத்தால், வயிற்றில் தங்கியுள்ள விஷ நீர்களை வெளியேற்றிவிடும். மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி துர்நாற்றத்தை நீக்கும். மஞ்சளில் வேப்பிலை சேர்த்து அரைத்துவிட்டால் அனைத்து வகையான வைரஸ் கிருமிகளையும் அழிக்கும் சக்தியுண்டாகும். மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்துக் கரைத்து ஆரத்தி எடுப்பதால், தொற்றுக் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.
மஞ்சள் பூசிக் குளிப்பதால், புலால் நாற்றம், கற்றாழை நாற்றம் நீங்கும். மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கெண்டால் மேக ரணம், மேகப் படைகள், வட்டமான படைகள், விஷக்கடிகள் நீங்கும்.
தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப்புண், வலி நீங்கும். வாதத்தைக் கண்டிக்கும். மஞ்சளை இலுப்ப எண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.
மஞ்சளை வேப்ப எண்ணெயில் தோய்த்துக் கொளுத்தினால் புகை வரும். மூக்கு வழியாக இழுத்தால், தலைவலி நீங்கும்.
மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, ரணங்களுக்கும் புண்களுக்கும் போட்டால், சீக்கிரத்தில் ஆறாத ரணங்கள் ஆறும்.
மஞ்சள், பூண்டு, வசம்பு சேர்த்து வேப்ப எண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு, காதில் சில துளிகள் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் நின்றுவிடும். மஞ்சளும், கடுக்காயும் சேர்த்து அரைத்துப் பூச, சேற்றுப் புண் குணமாகும். அடிபட்ட புண்ணுக்குப் போட, சீக்கிரம் புண்கள் ஆறிவிடும்.
மஞ்சளும், நெல்லிப் பொடியும் சமமாகக் கலந்து, தினம் உட்கொண்டால் நீரிழிவு கட்டுப்படும். அடிபட்ட வீக்கம், ரத்தக்கட்டிற்கு மஞ்சளைப் பற்றுப் போடுவதால், ரத்தக்கட்டு, வீக்கம் நீங்கி வேதனை குறைகிறது.
புகழ்பெற்ற, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புத்தூர் எலும்பு முறிவு சிகிச்சைக்கு கட்டுப்போடும் மருந்தில், மஞ்சள் முக்கியமான பொருளாகச் சேர்க்கப்படுகின்றன.
மஞ்சள் மங்கலகரமானது. உணவு மூலம் சேர்ந்தால், பல பிணிகள் நீங்கிவிடுகின்றன.
மஞ்சளின் மருத்துவ குணத்தை உணர்ந்து, எளிய முறையில் பணச் செலவில்லாமல், வீட்டில் வைத்துக்கொண்டு உபயோகிப்பதால், அநேக நன்மைகளை அடையலாம். விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகாவது, மஞ்சளை மனதார ஏற்றுக்கொண்டு, பல பிணிகளை நீக்குங்கள். பணவிரயம், கால விரயம் இருக்காது. மீண்டும் தமிழ் மருத்துவம் வருங்கால சந்ததியினருக்கு உதவட்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மஞ்சளின் மகிமை
» கருட மகிமை
» மஞ்சளின் மகிமை சொல்லும் அமெரிக்கப் பேராசிரியர்.
» மஞ்சளின் மருத்துவக் குணங்கள்
» பிரதோஷ மகிமை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum