தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என்றும் இளமைக்கு யோகாவின் ரகசியங்கள்!

Go down

என்றும் இளமைக்கு யோகாவின் ரகசியங்கள்! Empty என்றும் இளமைக்கு யோகாவின் ரகசியங்கள்!

Post  meenu Sat Feb 02, 2013 1:44 pm



"யோகாசனம் என்பது, எமனையும் வெல்லும் அரிய கலை. தினந்தோறும் குறிப்பிட்ட ஆசனங்களுடன், உணவுமுறையில் ஒருசில மாறுதல்களோடு யோகாசனங்களைச் செய்து வந்தால் புற்றுநோய், மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறு உள்பட எந்த நோயையும் மருந்தே இல்லாமல் குணப்படுத்திவிடலாம்'' என்கிற தி.ஆ.கிருஷ்ணன், தமிழகத்தின் தலைசிறந்த யோகா பேராசிரியர்களில் ஒருவர்.

``உடல், சுவாசம், மனதை இறைநிலை யோடு இணைப்பதுதான், யோகம் எனப்படுகிறது.

யோகத்தில் இமயம், நியமம், ஆசனம், பிராணா யாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்று 8 நிலைகள் உண்டு. இதில் நான்காவதாக வருவதுதான், யோகாசனம்!

யோகா என்ற சமஸ்கிருத சொல்லுக்கு `இணைதல்' என்று பொருள். நமது உடலையும் மனதையும் யோகா மூலம் ஒன்றிணைக்க முடியும். அப்படி ஒன்றிணைக்கும்போது அற்புதமான ஆற்றலைப் பெற முடியும். உலகில் 84 லட்சம் ஜீவராசிகளுக்கும் 84 லட்சம் யோகாசனங்கள் உண்டு.

ஆனால், இவை அத்தனையையும் விரிவாய் சொல்வாரும் இல்லை. செய்வாரும் இல்லை. ஆனாலும், இதில் குறிப்பிட்ட ஆசனங்களை நாள்தோறும் செய்துவந்தால், நீங்கள் `என்றும் பதினாறாக' இளமையுடன் திகழ முடியும். வாழ்நாள் முழுக்க நோய்-நொடியின்றி, ஆரோக்கியமாக நீடுழி வாழ இயலும்.

யோகா விதிமுறைகள்:

* யோகாசனம் செய்வதற்கு கருவிகளோ, சாதனங்களோ தேவையில்லை. ஒரு போர்வை மட்டும் இருந்தால் போதும்.

* தரையில் போர்வையை விரித்து இறை சிந்தனையோடு கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி ஆசனம் செய்ய ஆரம்பித்துவிடலாம்.

* யோகாசனம் செய்வதற்கு நிறைய விதிமுறைகள்-விதி விலக்குகள் உண்டு. அதிகாலையில் எழுந்து காலைக்கடன் முடித்து, குளித்து விட்டு, குறைந்த ஆடையுடன் வெறும் வயிற்றில் கீழே விரிப்பு விரித்து கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஆசனம் செய்ய வேண்டும்.

* இல்லற வாழ்வியலுக்கு கிழக்கு நோக்கியும், ஞானம்-ஆன்ம முக்திக்கு வடக்கு நோக்கியும் அமர்வது உத்தமம்.

* பொதுவாக, ஆசனங்களை முதலில் வலப்பக்கம் செய்து, பிறகு இடப்பக்கமாக செய்யவேண்டும்.

* அதிகாலை 4-6 மணிக்குள் யோகாசனம் செய்து முடிப்பது சாலச்சிறந்தது.

* குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது யோகாசனம் செய்ய வேண்டும்.

* உணவு உட்கொண்டபிறகு 3 அல்லது 4 மணிநேரம் கழித்து யோகாசனம் செய்யலாம்.

* இதில் திரவ உணவுகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு.

* முழுநேர கண் விழிப்பு நோயால் தூக்க மின்மை, இல்லறத்தில் கூடிய நாள், எண்ணெய் தேய்த்து குளித்த நாள், நீண்டதூர பயணம், வீட்டில் நன்மையோ தீமையோ ஏற்பட்ட நாள், மாதவிடாய், மகப்பேறு காலம், மனச்சோர்வு, களைப்பு, மனநிலை சரியின்மை ஆகிய நேரங்களில் யோகா செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum