தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாய் என்று திட்டினால் சந்தோஷப்படுங்கள்!

Go down

நாய் என்று திட்டினால் சந்தோஷப்படுங்கள்!  Empty நாய் என்று திட்டினால் சந்தோஷப்படுங்கள்!

Post  meenu Sat Feb 02, 2013 12:53 pm

ஒருவரை ஒருவர் கோபத்தில் திட்டும் போது, நாயே! என்று கூறுவர். இதனால் பிரச்சனை மேலும் பெரிதாகும்.ஏனென்றால் நாய் என்பதை கேவலமாக கருதுவர். ஆனால் நாயானது பைரவரின் அம்சமாகும். கிருஷ்ண பரமாத்மா கீதையில் நாயைப் பற்றி பெருமையாக கூறி உள்ளார். தர்மபுத்திரர் சொர்க்கத்துக்குப் போகும்போது தம்முடைய அன்புக்கு உரிய நாயையும் உடன் அழைத்துச் சென்றார் என புராணம் கூறுகிறது. நாய், வரலாற்றுப் பெருமை கொண்டது. வேதத்தில் நாய் பற்றிய கதை கூறப்பட்டுள்ளது. ரிக் வேதம், நான்கு கண்கள் கொண்ட நாய் காலதேவனுக்குத் துணை வருவதாகக் கூறுகிறது. அத்துடன் நாயை நான்கு வேதத்திற்கு இணையாக கூறுவர். இதற்கு ஒரு புராணக்கதை உண்டு.

ஒரு முறை ஆதிசங்கரர் கங்கையில் நீராடி விட்டு தனது சீடர்களுடன், நடந்து வந்து கொண்டிருந்தார். அவருக்கு எதிரில் ஒரு சண்டாளன் வந்து கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் அவனது மனைவி தலையில் மண்கலயங்களுடன் வந்து கொண்டிருந்தாள். பக்கத்தில் அவர்களது குழந்தைகள் ஆடிப்பாடி கொண்டிருந்தனர். சண்டாளன் தனது கையில் நான்கு நாய்களை பிடித்து கொண்டிருந்தான். இவர்களைப்பார்த்ததும் ஆதிசங்கரருக்கு அருவருப்பு ஏற்பட்டது. உடனே அவர், ஏ சண்டாளா! சீ தூரப்போ, என கோபத்துடன் கத்தினார். இதைக்கேட்ட சண்டாளன், மிக அமைதியுடன், ஐயா! நீங்கள் சீ தூரப்போ என்று கூறியது, என் உடலையா? அல்லது எனக்குள் இருக்கும் ஆத்மாவையா? என்றான். இதைக்கேட்டு அதிர்ந்து போன ஆதிசங்கரர், இவ்வளவு ஞானத்துடன் பேசும் நபர் யார்? என தன் ஞானதிருஷ்டியில் பார்த்தார். உடனே நெடுஞ்சாங்கிடையாக சண்டாளனின் காலில் விழுந்து வணங்கினார். சண்டாளனாக வந்தது வேறு யாருமில்லை. சாட்சாத் பரமேஸ்வரன் தான். மனைவியாக பார்வதியும், ஆடிப்பாடிய குழந்தைகளாக விநாயகரும் முருகனும், நான்கு நாய்களாக நான்கு வேதங்களும் தான் சிவனின் கூட வந்தவர்கள். ஆதிசங்கரருக்குள் இருந்த சிறு ஆணவத்தை அடக்கி அனைவரும் சமம் என்பதை உணர்த்தவே சிவன் இந்த வேடத்தில் வந்தார். இந்தக்கதையிலிருந்து நாய் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம்.

கிரேக்கர்களின் பழைய கதைகளிலும் இரு நாய்களைப் பற்றி கதைகள் வருகின்றன. மரண தேவதையின் சன்னிதானத்துக்குத் துவாரபாலகர்களாக நாய்கள் பணிபுரிகின்றனவாம். வேத காலக் கதையும் பித்ரு லோகத்துக்கு துவார பாலகர்கள் நாய்கள்தான் என்று கூறுகிறது. அவை வைவஸ்த சியாமம், ஸபலம் என்று பெயர் கொண்டவை. பாரசீகர்களின் தர்ம சாஸ்திரங்களில், பித்ரு லோகத்தையும் தேவ லோகத்தையும் இணைக்கும் சின்வத் என்னும் பாலம் ஒன்று இருப்பதாகவும், இறந்த பின் மனித ஆன்மாவை ஒரு நாயே இந்தப் பாலத்தின் வழியாக அழைத்துச் செல்லும் மார்க்க பந்து என்று எழுதி வைத்திருக்கிறார்கள். கிரேக்கர்களின் புராணக் கதை ஒன்றில், மூன்று தலைகள் கொண்ட கர்பேராஸ் என்னும் நாய்தான் காலதேவனுக்கு மெய்க் காவலன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வானுலகில் வாழும் நாய்க்கு திவ்யகதஸ்என்று பெயர் சூட்டியிருக்கிறது வேதம். கேனிஸ் என்னும் விண்மீன்களின் கூட்டத்தைத்தான் வேதம் சு நா ஸிர என்று குறிப்பிடுவதாக மாக்ஸ் முல்லர் தீர்மானிக்கிறார். ஸம்வத்ஸம் (ஓர் ஆண்டு) முடிந்ததும், பருவகால தேவதைகளை நாய்கள் எழுப்புவதாக ரிக்வேதம் முதல் மண்டலத்தில் ஒரு செய்தி உள்ளது. பழகிய நல்ல இனத்து நாயைப் பற்றி வால்மீகி ராமாயணத்தில் குறிப்பு வருகிறது. பரதன் மாமன் வீட்டுக்குப் போகும்போது பயிற்சி பெற்ற வேட்டை நாய்களையும் அழைத்துச் சென்றானாம். மனிதன் மீது அன்பு கொண்ட பிராணி நாயைப்போல் வேறில்லை. அதனால்தான் அது மொழி பேதமோ, தேசம், இனம், நிலை பேதமோ இன்றி, அனைத்தையும் கடந்து எவருடனும் ஒட்டுறவாக வாழ முடிகிறது. எனவே உங்களை யாராவது நாய் என்று திட்டினால் பெருமைப்படுங்கள், சந்தோஷப்படுங்கள், அவருக்கு மிகுந்த மரியாதை செலுத்துங்கள். திட்டியவர் மீது கோபப்படாதீர்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆன்மீகம் என்றால் ஆனந்தம் என்று சொல்லுவதும் சரிதான். ஆனந்தம் என்று சொல்வதை விட அமைதி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக அல்லது அமைதியினால் உருவாகும் ஆனந்தம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். துன்பம் இருக்கும் வரை அமைதியினால் உருவாகும் ஆனந்தம் எப்பட
» என் சகோதரியின் கணவர், மணமாகி இருபது வருடம் கழித்து வேறொரு பெண்ணோடு பழகுகிறார். என் சகோதரி தன்னை விட்டுவிட்டு கணவர் சென்று விடுவாரோ என்று அஞ்சுகிறாள். என்ன செய்வது என்று கூறுங்கள்.
» என் வயது 30. நல்ல கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கை நன்றாகச் செல்கிறது. ஆனால், தற்சமயம் உடல்நிலை சரியில்லை. அதுவும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும், எந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.
» நாய் வளர்ப்பு
» புத்தியுள்ள நாய்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum