சுக்கிரன் தலம் - கஞ்சனூர்
Page 1 of 1
சுக்கிரன் தலம் - கஞ்சனூர்
சுக்கிர தலமான கஞ்சனூர் கும்பகோணத்திற்கு கிழக்கில் 18 கி.மீ.தொலைவில் உள்ளது. சூரியனார் கோயிலிலிருந்து 3 கி.மீ. மயிலாடுதுறையிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. மதுரை ஆதினத்தின் ஆட்சிக்கு உட்பட்டது. இக்கோயில் ஐந்து அடுக்கு ராசகோபுரம் உடையதாய் கிழக்குத் திசை பார்க்க இக்கோயில் அமைந்துள்ளது.
அப்பரால் பாடப்பெற்ற தலம். பிற நவக்கிரக தலங்களில் அந்தந்த நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி, உருவம் இருக்கும், ஆனால் கஞ்சனூரில் சுக்கினுக்கு தனி சன்னதியோ அல்லது உருவச் சிலையோ கிடையாது. சிவ பெருமானே இங்கு சுக்கிரனாக காட்சியளிக்கிறார்.சுக்கிரன் சிவபெருமானிடம் ஐக்கியமாகியுள்ளார் எனப்படுகிறது.
இறைவன்-அக்கினீஸ்வரர்,
இறைவி-கற்பகாம்பிகை
தல விருட்சம் -பொரசு.
அக்னீஸ்வரரை பராசர்-கம்சன்,சந்திரன் ஆகியோர் வழிபட்டு அருள் பெற்றுள்ளார்கள். பிரம்மதேவருக்கு திருமணக் கோலம் காட்டி அருளியதால் இறைவன் இறைவியை தம் வலம்பாகத்தில் மணக்கோலத்தில் கொண்டு அருளுகிறார். அசுர குரு சுக்கிரனால் ஏற்பட்ட சாபம் நீங்க விஷ்ணு இங்கு வந்து வழிபட்டு சுக்கிர தோஷம் நீங்கப்பெற்றார்.
எனவே இத்தலத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்கு சுக்கிர தோஷம் நீங்கும். வாயிலில் கொடி மரத்தை அடுத்துள்ள நந்தி சிறப்புடையது. இந்தக்கல்நந்தி புல் தின்றதாக கதை ஒன்று உண்டு. சிறிய பசுங்கன்று ஒன்றின் மீது அந்தணர் ஒருவர் தான் தூக்கி வந்த புல்லுக்கட்டை கன்று இருப்பது தெரியாமல் அதன் மேல் போட்டு விட்டார்.
இதனால் பசுங்கன்று இறந்து விட்டது. தோஷம் நேர்ந்து விட்டதால் இவர் குலத்தினர் இவரை ஒதுக்கி வைத்து விட்டனர். இதனால் வருத்த மடைந்த அந்தணர் விரதத்தரிடம் கூற அவர் நீராடி கையில் ஒரு பிடி புல்லுடன் வந்து கல் நந்தியிடம் அப்புல்லைக் கொடுத்தால். நந்தி அதனைத் தின்றதால் அந்தணரின் தோஷம் நீங்கியது.
வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதாலும், கஞ்சனூர் சென்று வழிபடுவதாலும் இராஜராஜேஸ்வரியைப் பூசித்து வருவதாலும் வைரக்கல்லை தரித்துக் கொள்வதாலும், வெள்ளைநிற ஆடை,வெள்ளி மொச்சை தானியத்தை தானம் கொடுப்பதாலும் சுக்கிர கிரக தோஷங்கள் குறையும். தொடர்புக்கு:- 0435-2473737.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» சுக்கிரன் சுக்கிரன்
» சுக்கிரன் 108 போற்றிகள்
» கஞ்சனூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் கோவில்
» கஞ்சனூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம்
» சுக்கிரன் :வழிபாடு,பரிகாரம்
» சுக்கிரன் 108 போற்றிகள்
» கஞ்சனூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் கோவில்
» கஞ்சனூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம்
» சுக்கிரன் :வழிபாடு,பரிகாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum