பீட்ரூட் சப்பாத்தி
Page 1 of 1
பீட்ரூட் சப்பாத்தி
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் – 2
கேரட் – 2
உருளைக்கிழங்கு – 2
பச்சை பட்டாணி – அரை கப்
கோதுமை மாவு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 6
செய்முறை
பச்சை மிளகாயை எடுத்து அரைத்துக் கொள்ளவேண்டும். உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பீட்ரூட், கேரட் இரண்டையும் துருவிக் கொள்ளவேண்டும். குக்கரில் துருவிய கேரட், பீட்ரூட், ஊறிய பட்டாணி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வேகவைக்கவேண்டும்.
வேக வைத்தது ஆறிய உடன் தேவையான அளவு கோதுமை மாவு, அரைத்த பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்துக் கொள்ளவேண்டும்.
எண்ணெய் வரும் கவரில் சிறிது எண்ணெய் விட்டு கைகளால் அதை தேய்த்து வட்டமாக சப்பாத்தி போல செய்துக் கொள்ளவேண்டும். அதை தோசை கல்லில் போட்டு நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது சுவையான பீட்ரூட் சப்பாத்தி தயார். இந்த சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம் அல்லது வெங்காய தயிர் பச்சடி செய்து அதனுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
மருத்துவக் குணங்கள்:
பீட்ரூட் உடலுக்கு குளிர்ச்சி தரும்.
பீட்ரூட் புற்று நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.
பீட்ரூட் இரத்த சோகை, உடல் எடை ஆகியவற்றை குறைக்க செய்யும்.
பீட்ரூட் முகப்பொலிவை கூட்டும்.
பீட்ரூட் சிறு நீரக எரிச்சலை குறைக்கிறது.
கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன.
கோதுமை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum