தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கால்களுக்கான யோகா பயிற்சி

Go down

கால்களுக்கான யோகா பயிற்சி Empty கால்களுக்கான யோகா பயிற்சி

Post  meenu Fri Feb 01, 2013 2:12 pm

செய்முறை...

உங்கள் ஒட்டு மொத்த கவனத்தையும் இந்தப் பயிற்சியின்போது அடிவயிற்றில் உள்ள உயிர்நிலைப் பகுதிக்குக் கொண்டு சென்று, ஒருநிலைப் படுத்துங்கள். நாற்காலியில் உட்காரும் நிலையில் கால்களை லேசாக மடக்கி வைத்துக் கொண்டு கைகள் இரண்டையும் முன்பக்கம் தோள்பட்டை அளவில் நீட்டுங்கள்.

முட்டிகள் மடங்கிய நிலையிலேயே ஆறு முறை காற்றை உள்ளிழுத்து வெளியே விடுங்கள். பிறகு நேராக நின்று இடது காலை மட்டும் பக்கவாட்டில் நேராக நீட்டி வலது காலை மடக்குங்கள். கீழே உட்கார்ந்துவிட வேண்டாம்.

பாதி அமர்ந்த நிலையில், ஆறு முறை மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். பிறகு, இதே போல் வலது காலை நீட்டி இடது காலை மடக்கி மீண்டும் ஆறு முறை நாசி வழியாக காற்றை உள்ளிழுத்து மெதுவாக வெளியே விடுங்கள். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யலாம்.

பயன்கள்...

இந்தப் பயிற்சி செய்வதால் சிறுநீரகங்களுக்கு நல்ல பலம் சேர்க்கும். சிறுநீரகம் சம்பந்தப்பட்ட வியாதிகளை ஓட வைக்கும். கால் தொடைகளில் உள்ள தேவையற்ற சதை கரையும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum