சாப்பிடும் முன் சூப்
Page 1 of 1
சாப்பிடும் முன் சூப்
சாப்பிடுவதற்கு முன் சூப் சாப்பிடுவதை சிலர் ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பணக்காரர்களின் விருந்தில் இது ஒரு கவுரவ கலாசாரமாக பின்பற்றப்படுகிறது. 16- நூற்றாண்டின் ஐரோப்பியர்கள் இரவு சாப்பாட்டுக்கு முன் சூப் சாப்பிடுவதை ஒரு வழக்கமாக உருவாக்கினார்கள். இதை அறிவியல் ரீதியாக சொல்லும் போது அப்பிடைசர் ஸ்டார்ட்டர் வகையைச் சேர்ந்தது என்கிறார்கள்.
அதாவது அதிகம் பசி இல்லாமல் இருக்கையில் இந்த சூப் வயிற்றுக்குள் சென்று ஜீரணத்துக்கு உண்டான என்சைம்களைத் தயார் நிலையில் வைத்திருக்க முடியும். வசதி படைத்தவர்களுக்கு பெரும்பாலும் பசி எடுப்பதில்லை. அந்த பசியைத் தூண்டி விடுவதற்காக இப்படி சூப் கொடுக்கப்டுகிறது. சூப் மட்டும்ல்ல மசாலா வாசனைகளும் பசியை தூண்டிவிடுகின்றன என்கிறார்கள்.
ஒட்டலுக்கு அருகில் குடியிருப்பவர்கள் எப்போதும் மசாலா வாசனையை நுகர்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தொடர்ந்து மசாலா வாசனையை மட்டும் நுகர்வதால் கல்லீரல் பிரச்சனை, பித்தம் முதலியவை ஏற்படலாம்.
நமக்கு உணவு வாசனை மூக்கை எட்டியவுடன் நமது வயிறு உணவை எதிர்பார்த்து காத்துடக் கொண்டிருக்கும். வாசனை வரும் போது எல்லா சுரப்பிகளும் தயாராகி விடுகின்றன. மூக்குக்கு எட்டியது வாய்க்கும் எட்ட வேண்டும் என்பது இயற்கை நியதி. அதை மீறி வெறும் வாசனையை மட்டுமே தொடர்ந்து சுவாசிக்கம் போது சுரப்பிகள் பலவீனம் அடைகின்றன. அதனால் ஓட்டல் அருகே குடியிருப்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிஸ்கெட், கேக் சாப்பிடும் முன் கொஞ்சம் யோசிங்களேன்!
» சாப்பிடும் போது பேசக்கூடாது
» கேரட்டை சாப்பிடும் முறை...
» சாப்பிடும் விதம் சரிதானா?
» சாப்பிடும் போது பேசக்கூடாது
» சாப்பிடும் போது பேசக்கூடாது
» கேரட்டை சாப்பிடும் முறை...
» சாப்பிடும் விதம் சரிதானா?
» சாப்பிடும் போது பேசக்கூடாது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum