தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சாப்பிடும் போது பேசக்கூடாது

Go down

சாப்பிடும் போது பேசக்கூடாது Empty சாப்பிடும் போது பேசக்கூடாது

Post  meenu Fri Jan 18, 2013 1:07 pm

நாள் தோறும் சிறிது நேரமாவது மவுனத்தை கடைப்பிடிக்க வேண்டும். மவுனத்தை கடைப்பிடத்தால் சண்டை, சச்சரவு இருக்காது. நம்மால் முழுமையாக மவுனமாக இருக்க இயலா விட்டாலும் முடிந்த அளவு பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது.

குறிப்பாக சாப்பிடும் போது பேசக்கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. இப்படி செய்கின்ற போது நம் நாக்கு ருசியை கட்டுப்படுத்தியாக வேண்டும். இது வேண்டாம், அது வேண்டும், இதற்கு உப்பு போடு, இதற்கு நெய்விடு, என்றெல்லாம் சொல்ல முடியாதல்லவா? அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்ட காந்தியடிகள் பல்வேறு சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இருந்த போதிலும், வாரம் ஒரு நாள் மவுன விரதம் கடைப்பிடித்தார். ஆனால் மக்கள் மவுனமாய் இருப்பது என்பது சாத்தியமே இல்லாதது என்று கருகின்றனர். நீரை மேலிருந்து தொடர்ந்து கலக்கிக் கொண்டிருந்தால், கீழே உள்ள முத்து தெரியாமலே போய் விடும். அது போல மனதில் பலதரப்பட்ட எண்ணங்களால் உள்ளே இருக்கின்ற ஆத்மா என்னும் முத்துவின் தரிசனம் தெரியவில்லை.

எண்ண அலைகளை நிறுத்தி விடுவது தான் உண்மையான மவுனம் இதற்கு உதவியாக இருப்பது வாய்மவுனம். யோக சாம்ராஜ்யத்துக்குள் நுழைவதற்குள் முதல் வாசல் மவுனம் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum