ஆபத்தைத் தரும் பழைய பிரவுசர்கள்
Page 1 of 1
ஆபத்தைத் தரும் பழைய பிரவுசர்கள்
குறிப்பிட்ட சில இணைய பயனாளர்கள் பயன்படுத்தும் இணைய பிரவுசர்கள், மிகப் பழையதாகவும், பழைய பதிப்புகளாகவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. காஸ்பெர்ஸ்கி நிறுவனம், பன்னாட்டளவில் மேற்கொண்ட தங்கள் வாடிக்கையாளர்களின் பயன்பாடு குறித்த ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. மொத்தத்தில் 23% பேர் பயன்படுத்தும் பிரவுசர்கள், மிகப் பழையதாக உள்ளன. ஏறத்தாழ பத்தில் ஒருவர் பழைய பதிப்புகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அவர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் பாதுகாப்பு பிரச்னைக்குரியதாகின்றன.
இவர்களில் 14.5% பேர், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பதிப்பிற்கு முந்தைய பதிப்பினையே பயன்படுத்துகின்றனர். 8.5% பேர், மிகப் பழைய பிரவுசர்கள் மூலம் இணையத்தைக் காண்கின்றனர். 77% பயனாளர்கள், சோதனைப் பதிப்பு மற்றும் புதிய பதிப்பினைப் பயன்படுத்துகின்றனர்.
ஒரு பிரவுசரின் புதிய முழுமையான பதிப்பு வெளியான பின்னர், ஒரு மாதம் கழித்தே, அதனைப் பயனாளர்கள் பயன்படுத்தத் தொடங்குகின்றனர். ஆனால், சைபர் உலகத்தினை தங்கள் மால்வேர் புரோகிராம்களால் ஆட்டிப் படைக்கும் ஹேக்கர்கள், புதிய பதிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, எந்த இடத்தின் தவறைத் தங்கள் நோக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெளிவாகத் தெரிந்து கொள்கின்றனர். அவற்றைப் பயன்படுத்தி தங்கள் நாச வேலைக்கு அடித்தளம் அமைக்கின்றனர்.
நிறுவனங்களில், அதன் ஊழியர்கள், புதிய பிரவுசருக்கு மாறுவதற்கு நிர்வாகத்தினர் அனுமதி அளிப்பதில்லை.
சில காலத்திற்குப் பின்னரே, மிகத் தயக்கத்துடன் அனுமதிக்கின்றனர். இது முற்றிலும் தவறான போக்காகும். இது போல பழைய பிரவுசர்களை நிறுவனங்கள் பயன்படுத்துவது, நிறுவனத்தின் கம்ப்யூட்டருக்கும், அவற்றில் உள்ள விலை மதிப்பில்லா டேட்டா பைல்களுக்கும் ஆபத்தினை விளைவிக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பழைய வீட்டை புதுப்பிக்காவிட்டால்...
» பழைய சோறு பழைய சோறு
» திருக்குறள் பழைய உரை-4 அறத்துப்பால்
» திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்குள்
» பழைய உணவுகளைத் தவிர்க்கவும்
» பழைய சோறு பழைய சோறு
» திருக்குறள் பழைய உரை-4 அறத்துப்பால்
» திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்குள்
» பழைய உணவுகளைத் தவிர்க்கவும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum