உடலுக்கு நலம் தரும் உடற்பயிற்சி
Page 1 of 1
உடலுக்கு நலம் தரும் உடற்பயிற்சி
உடற்பயிற்சிகளை ஏரோபிக் உடற்பயிற்சி (Aerobic Exercise) மற்றும் அன்ஏரோபிக் உடற்பயிற்சி (Anaerobic Exercise) என்று இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஏரோபிக் என்றால் காற்று அல்லது ஆக்ஸிஜன் என்று பொருள். தொடர்ந்து மூச்சு (ஆக்ஸிஜன்) வாங்கும் ஓர் உடற்பயிற்சியை 20 நிமிடங்கள் செய்வதே “ஏரோபிக் உடற்பயிற்சி” ஆகும்.
20 நிமிடங்கள் தொடர்ந்து வேகமாக நடப்பது, ஓடுவது அல்லது சைக்கிள் மிதிப்பது அல்லது நீச்சல் அடிப்பது ஏரோபிக் உடற்பயிற்சி ஆகும். வீட்டு வேலை செய்வது, டென்னிஸ் விளையாட்டு, ஜிம் பயிற்சி போன்றவை அன்ஏரோபிக் உடற்பயிற்சிகள் ஆகும்.
உடல் எடையைக் குறைக்கவும், இதயத் தசைகளை வலுப்படுத்தவும் ஏரோபிக் உடற் பயிற்சிகளைத் தவறாமல் வாரம் மூன்று முறைக்குக் குறையாமல் செய்தல் வேண்டும். ஐந்து நிமிடங்கள் தயார் பயிற்சி (Warm Up) செய்த பின்னர் 20 நிமிடங்கள் ஓடி பின்பு ஐந்து நிமிடங்கள் முடிவுப் பயிற்சி (Warm Down) செய்தலே ஒரு சிறந்த ஏரோபிக் உடற்பயிற்சி ஆகிவிடுகிறது.
பயிற்சியை அதிகமான நேரமும் செய்யலாம். உடற்பயிற்சி மேற்கொள்ளும் முன்னர் ஒரு மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» உடலுக்கு நலம் தரும் சிறு தானியங்கள்
» உடலுக்கு உறுதி தரும் உடற்பயிற்சி
» உடலுக்கு நலம் பயக்கும் முருங்கை காய்
» மசாஜ்’ உடலுக்கு எவ்வாறு நலம் பயக்கிறது
» உடலுக்கு நலம் பயக்கும் முருங்கை காய்
» உடலுக்கு உறுதி தரும் உடற்பயிற்சி
» உடலுக்கு நலம் பயக்கும் முருங்கை காய்
» மசாஜ்’ உடலுக்கு எவ்வாறு நலம் பயக்கிறது
» உடலுக்கு நலம் பயக்கும் முருங்கை காய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum