கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆக உடற்பயிற்சி
Page 1 of 1
கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆக உடற்பயிற்சி
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, 'சிசேரியன்' என்றாலே ஒரு ஆச்சரியமான செய்தியாக இருந்தது. அந்த அளவுக்கு சுகப்பிரசவம் என்பது இயல்பான ஒன்றாக இருந்து வந்தது. ஆனால், மருத்துவ வசதிகள் நிறைந்துவிட்ட இன்றைய காலக் கட்டத்தில் சுகப்பிரசவம் என்பதுதான் மிகவும் ஆச்சரியமான அபூர்வமான ஒன்றாக ஆகிவிட்டது.
இன்று நடைமுறையில் அந்த அளவுக்கு பெண்களுக்கு சுகப்பிரசவம் என்பதே மிகவும் அரிதாகிவிட்டது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான காரணமாக இக்கால பெண்களிடையே உடல் உழைப்பு என்பது கொஞ்சம் கூட இல்லை என்பதுதான் பொதுவான உண்மை. அதிலும் கர்ப்பிணி பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.
படுக்கையை விட்டு நகரவே மாட்டார்கள் என்பதுதான் சமீப காலமாக பெண்களிடையே நிலவும் பொதுவாக கருத்து. இந்நிலையில்தான், ' கர்ப்பிணிப் பெண்கள் தினந்தோறும் சில எளிய உடற்பயிற்சி செய்து வந்தால் அவர்களுக்கு சுகப்பிரசவம் நிச்சயம்' என்று டென்மார்க் டாக்டர்கள் தங்களது ஆய்வில் உறுதி செய்துள்ளனர்.
டென்மார்க்கை சேர்ந்த மருத்துவக் குழுவினர் 87 ஆயிரத்து 232 கர்ப்பிணிப் பெண்களிடம் இதுகுறித்து கருத்துக்களை கேட்டறிந்தனர். இதில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் தினந்தோறும் சில உடற்பயிற்சி (மருத்துவரின் ஆலோசனைப்படி) செய்து வருவதாக கூறினர்.
நீச்சல், ஏரோபிக்ஸ், நடனம், நடைப் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை செய்து வந்ததாக தெரிவித்தனர். மற்ற இரண்டு பங்கு பெண்கள் உடற்பயிற்சி எதுவும் செய்யும் பழக்கமில்லை என்று கூறினர்.
இறுதியில், கர்ப்பக் காலத்தில் தினந்தோறும் உடற்பயிற்சி செய்தவர்களில் பெரும்பாலானோருக்கு சுகப்பிரசவம் நிகழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.. உடற்பயிற்சி செய்யாதவர்களில் பெரும்பாலானோருக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்ய நேர்ந்தது. எனவே, உடல் உழைப்பு அதிகம் உள்ள பெண்களுக்கு கர்ப்பக் காலத்தில் 'ரிஸ்க்' குறைவு என்பதுதான் இந்த ஆய்வின் முடிவு.
எனவே கர்ப்பக் காலத்தில் பெண்கள் தங்களால் முடிந்த சில சில உடற்பயிற்சிகளை ( மருத்துவரின் ஆலோசனையின் படி) செய்து வந்தால் சிசேரியன் செய்வதை தவிர்க்க முடியும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சுகப்பிரசவம்
» சுகப்பிரசவம் சாத்தியமாக
» சுகப்பிரசவம் ஏற்படுத்தும் மூச்சுப்பயிற்சி!
» சுகப்பிரசவம் தரும் நந்தி
» சுகப்பிரசவம் ஏற்படுத்தும் மூச்சுப்பயிற்சி!
» சுகப்பிரசவம் சாத்தியமாக
» சுகப்பிரசவம் ஏற்படுத்தும் மூச்சுப்பயிற்சி!
» சுகப்பிரசவம் தரும் நந்தி
» சுகப்பிரசவம் ஏற்படுத்தும் மூச்சுப்பயிற்சி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum