சுகப்பிரசவம் ஏற்படுத்தும் மூச்சுப்பயிற்சி!
Page 1 of 1
சுகப்பிரசவம் ஏற்படுத்தும் மூச்சுப்பயிற்சி!
கர்ப்பிணிகள் மூச்சுப் பயிற்சி மேற்கொள்வது பிரசவத்தை எளிதாக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறக்கும் முன்னர் மூச்சுப் பயிற்சி செய்வதால் சுகப்பிரசவம் ஏற்படுவது எளிதாகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரசவ வலி என்பது, ஏதோ வலி எடுத்தது… உடனே குழந்தை பிறந்தது என்பது போன்ற சாதாரண விஷயமில்லை… தாய்க்கு அதீத வலி இருந்தாலும் பத்து மாதங்களாக தன்னுள் வளர்த்த ஒரு உயிரை உலகிற்கு அறிமுகப்படுத்தும் சந்தோச தருணம்.
பிரசவத்தின் போது லேசான வலியில் தொடங்கி, அது மெதுமெதுவாய் அதிகரித்து, கடைசியாக சஸ்பென்ஸை உடைப்பதுபோல கருவில் இருந்து குழந்தை ரிலீஸ் ஆகும். சில மணி நேர அவஸ்தைக்குப் பிறகுதான் குழந்தை வெளிவரும். வெளி வரவேண்டும். இந்த வலி மெதுமெதுவாய் அதிகரிக்கவும் ஒரு குறிப்பிட்ட வரைமுறை இருக்கிறது. முதல் பிரசவத்துக்கு ஒரு வகையாகவும் அதன்பிறகு வரும் பிரசவங்களுக்கு வேறு விதமாகவும் இது அமையும்.
பிரசவ அறிகுறிகள்
பிரசவ வலி எடுக்கும்போது கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி, அதாவது சர்விக்ஸின் நீளம் வழக்கத்தை விடவும் குறையத் தொடங்கும். இப்படி அதன் நீளம் குறையும்போதே அது மெதுவாகத் திறக்கவும் தொடங்கும். சர்விக்ஸின் இந்த இரண்டு செயல்பாடுகளுமே உண்மையான பிரசவ வலி ஏற்பட்டால் மட்டுமே ஒரே சமயத்தில் நிகழும் என்கின்றனர் மருத்துவர்கள்.
முதுகின் கீழ் பகுதியில் வலி ஏற்படும். பெரும்பாலும் அது வலி மிகுந்த தசை இறுக்கமாகவே இருக்கும். பிறப்புறுப்பில் இருந்து ரத்தத்துடன் கூடிய திரவம் வெளிப்படும். இந்த அறிகுறிகள் பிரசவ காலத்தை உறுதிப்படுத்துகின்றன. எனவே வலி மிகுந்த அந்த நேரத்தில் மூச்சுப் பயிற்சி மேற்கொள்வது பிரசவத்தை எளிதாக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மனதை ஒருநிலைப்படுத்துங்கள்
மூச்சுப் பயிற்சியின் போது பிரச்சினைக்குரிய எதைப்பற்றியும் நினைக்காமல் உங்கள் மனதை ஒரு நிலை படுத்த வேண்டும்… ஒவ்வொரு முறை மூச்சை வெளி விடுவதில் மட்டும் நீங்கள் உங்கள் நினைப்பை ஒரு முக படுத்த வேண்டும்..மூச்சை உள்ளிழுத்தல் தானாக நடக்கும்.
மூச்சை உள்ளிருக்கும் போது அவரவருக்கு பிடித்தமானவற்றை நினைத்து மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளலாம். ஏதாவது ஒரு பெயரை சொல்லியபடி, அல்லது உங்களுக்குப் பிடித்த கடவுளின் பெயரைச் சொல்லியபடி பயிற்சி எடுக்கலாம். உங்கள் நினைப்பை அலைபாய விடாமல், இந்த பயிற்சியை ஒரு சீரான ஓட்டத்தில் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
எண் கணக்கு
பெயரை நினைக்க யோசனையாக இருந்தால் எண் மூச்சு பயிற்சி மேற்கொள்ளலாம். மூச்சை மெதுவாக உள்ளிழுக்கும் பொழுது ஒன்றில் இருந்து உங்களுக்கு எத்தனை எண் மனதில் தோன்றுகிறதோ அதை எண்ணவேண்டும். அதே அளவு எண் கணக்கை நீங்க மூச்சினை வெளியில் விடும்போதும் எண்ணிக்கையில் வைத்து கொள்ளலாம். உதாரணத்துக்கு நீங்க மூச்சை உள்ளிழுக்கும் பொழுது மூன்று வரை எண்ணினால் மூச்சை வெளியில் விடும் பொழுதும் அதே மூன்று வரை மெதுவாக எண்ண வேண்டும்..
முடிந்தவரை மூக்கின் வழியாக மூச்சு உள்ளிழுக்கவும் வாய் வழியாக மூச்சை வெளி விடவும் முயற்சிக்க வேண்டும்.. அவ்வப்பொழுது தொண்டை காய்ந்து போகாமல் இருக்க சிறிது தண்ணீர் பருகவும். இந்த மூச்சு பயிற்சியை கர்ப்ப காலத்தில் இருந்தே செய்து பயிலுங்கள்…பிரசவ வலியின் பொழுது இந்த பயிற்சி மிகவும் உதவும். எளிதாய் சுகப் பிரசவம் நடக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுகப்பிரசவம் ஏற்படுத்தும் மூச்சுப்பயிற்சி!
» உடல் ஆரோக்கியத்திற்கு மூச்சுப்பயிற்சி
» உடல் ஆரோக்கியத்திற்கு மூச்சுப்பயிற்சி
» சுகப்பிரசவம்
» சுகப்பிரசவம் நடக்க வேண்டும்?
» உடல் ஆரோக்கியத்திற்கு மூச்சுப்பயிற்சி
» உடல் ஆரோக்கியத்திற்கு மூச்சுப்பயிற்சி
» சுகப்பிரசவம்
» சுகப்பிரசவம் நடக்க வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum