நடைபயிற்சியே சிறந்த உடற்பயிற்சி
Page 1 of 1
நடைபயிற்சியே சிறந்த உடற்பயிற்சி
உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது எனில் உடற்பயிற்சியும் சிறந்த உணவுப் பழக்கமுமே ஆகும். உணவுப்பழக்கத்தில் எல்லோருமே கவனம் எடுத்துக்கொள்கிறோம். அதுபோல உடற்பயிற்சியிலும் கவனம் எடுத்துக்கொள்ளுதல் அவசியம்.
உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பரவலாக பேசப்படும் காலம். உடற்பயிற்சிக்கென்றே எல்லாவித கருவிகளுடனும் உடற்பயிற்சி மையங்கள் உருவாகிக்கொண்டிருக்கும் வேளையில் உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி எத்தனை முக்கியம் வாய்ந்தது என்பதனை ஒவ்வொருவரும் சற்றாவது அறிந்து நடைமுறைப்படுத்திக் கொள்வது சிறந்து.
நகரத்து மக்களிடத்திலேயே இந்த உடற்பயிற்சிப் பழக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. 16 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகமாக உடற்பயிற்சியை செய்பவர்களாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக 29 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஆர்வம் உடற்பயிற்சியிலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விளையாட்டுகளிலும் அதிகமாகியே வருகிறது.
உடற்பயிற்சி என்பது நகரத்து மக்களிடம் ஒரு நவீன பழக்கமுமாக மாறிவருகிறது. நகரத்து மக்கள் பலர் உடற்பயிற்சி மையத்திற்குச் சென்று உடற்பயிற்சியை செய்யவில்லையெனினும் சாதாரணமாக நேரத்தை ஒதுக்கி நடக்கவோ அல்லது சைக்கிள் ஓட்டுவதோ பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சைனா, நெதர்லாண்ட் மற்றும் மேற்கத்திய நாடுகளில் அலுவலக வேலைக்குச் செல்பவர்கள் பலர் வசதியான வாகனம் இருந்தும் நடந்து செல்வதையோ அல்லது சைக்கிளில் செல்வதையோ பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நடைபயிற்சி என்பது உடற்பயிற்சிகளில் சிறந்ததும் தேவையான ஒரு பயிற்சியுமாக இருக்கிறது. இது எல்லா வயதினருக்கும் ஏற்ற பயிற்சியாகும். நடைபயிற்சியை தினமும் பழக்கமாக்கிக் கொள்வதால் உடல் இரத்த ஓட்டமானது சீராகிறது,நுரையீரல் சுவாசம் சீராகிறது, உணவு செரிமானம் சீராகிறது.
மேலும் இது உடலை வலுப்படுத்துவதோடல்லாமல் மூளையை நன்றாக புத்துணர்ச்சியாக்குகிறது. பிறறிடத்தில் மென்மையாக பழகும் குணத்தை வளர்க்கிறது. நடை பயிற்சி என்பது பொதுவாக தினமும் விரைவான எட்டுக்களை வைத்து 6 கிலோமீட்டர் வரை செல்வதாகும். நான்கு மணிநேரம் நீந்துவதும், நான்கு மணிநேரம் டென்னிஸ் விளையாடுவதும் இதற்குச் சமமானதே.அல்லது 20 கிலோ மீட்டர் சைக்கிள் மிதிப்பதும் இதற்குச் சமமானதே.
அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் இருப்பவர்கள் லிப்ட்டைப் பயன்படுத்தாமல் ஒவ்வொரு முறையும் படிகளைப் பயன்படுத்தி ஏறி இறங்குவதாலும், வீட்டைச் சுத்தப்படுத்துதல், விளையாட்டு மைதானத்தில் சிறு குழந்தைகளுடன் விளையாடுவதாலும் நடை பயிற்சியின் தேவையை சற்று சமன் செய்து கொள்ளலாம்.
நடைபயிற்சி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு பலமும் உடலின் வலுவும் அதிகரிக்கச் செய்கிறது. நடைபயிற்சியின்போது உடலிலுள்ள எல்லாத் தசைத் தொகுதிகளும் இயங்குவதால் உடலுக்கு அதிகமான ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.இதனால் மூச்சை சற்று அதிகப்படுத்துகிறோம்.
இரத்த சுழற்சியும் உடலின் எல்லாபாகங்களுக்கும் இயக்கத்தை அதிகப்படுத்தி பின் சரியாக்குகிறது. நாள்தோறும் நடைபயிற்சியை செய்வதால் உடலில் தேவைக்கதிகமான எடை குறைகிறது. இப்பயிற்சி உடலிலுள்ள மூட்டுகளை பலப்படுத்துகிறது.
இதயம், நுரையீரல் ஆகியவற்றின் இயக்கம் சீராக்குகிறது. நடை பயிற்சியைப் பழக்கப்படுத்திக் கொண்டவர்கள் அன்றாடம் செய்யும் வேலைகளை சோர்வின்றி செய்ய வழிவகுக்கிறது.
குறிப்பாக முதுமையடைந்தவர்கள் கூட ஆரோக்கியமாக தங்களின் இயல்பான வேலைகளைச் செய்துகொள்ளும் திறமையை வளர்த்துவிடுகிறது.
அலுவலகம், வேலை, உறக்கம் மீண்டும் அலுவலகம், வேலை, உறக்கம் என்று சக்கரம்போல தினசரி வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர்களுக்கு உடற்பயிற்சி என்பது மறந்தே போய்விட்டது. சில கனமான பொருட்களை இடம்மாற்ற வேண்டுமெனினும் பிறர் உதவியை நாடுபவர்களாகி விடுகிறார்கள். எனவே நடைபயிற்சியை மேற்கொள்வோம்! இத்தகைய நிலையைத் தவிர்ப்போம்! ஆரோக்கியம் காப்போம்!
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நடைபயிற்சி ஓரு சிறந்த உடற்பயிற்சி
» ஜாக்கிங்கை விட வாக்கிங்கே சிறந்த உடற்பயிற்சி
» ஜாக்கிங்கை விட வாக்கிங்கே சிறந்த உடற்பயிற்சி
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» பிலிம்பேர் விருது: இலியானா சிறந்த அறிமுகம்… வித்யா பாலன் சிறந்த நடிகை
» ஜாக்கிங்கை விட வாக்கிங்கே சிறந்த உடற்பயிற்சி
» ஜாக்கிங்கை விட வாக்கிங்கே சிறந்த உடற்பயிற்சி
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» பிலிம்பேர் விருது: இலியானா சிறந்த அறிமுகம்… வித்யா பாலன் சிறந்த நடிகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum