எளிய முறையில் சில உடற்பயிற்சி குறிப்புகள்
Page 1 of 1

• காலையில் எழுந்திருக்கும் போது, தரையில் முதுகு படும்படியாக நேராக படுக்கவும். மூச்சை இழுத்து, வயிற்று தசை உள்ளிழுத்து நிறுத்தவும். இப்படி 10 வினாடிகள் என 10 முதல் 15 முறை செய்யுங்கள்.
* முதுகுப் பிடிப்பு இல்லாமல் இருக்கணுமா, காலை, தொடை தசைகள் வலுவாக இருக்கணுமா, இதோ அடுத்த உடற்பயிற்சி. படுக்கையில் இருந்து எழுந்து, தரையில் நில்லுங்கள். கைகளை உயர்த்தி தலைக்கு மேல் இரு புறமும் நிறுத்துங்கள். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒரே நேராக நிற்கும். இப்போது, வலது காலை மட்டும் தூக்கி தரைக்கு இணையாக நிறுத்தவும். இப்படி மூன்று முறை பத்து வினாடிகள் செய்யவும். இடது காலையும் இப்படி செய்ய வேண்டும்.
• குளித்து விட்டு உடலை டவலால் துடைக்கப்போகிறீர்கள். இந்த டவலிலும் உடற்பயிற்சி உள்ளது. டவலின் ஒரு ஓரத்தை வலது கையில் மேல் நோக்கி பிடிக்கவும். அதன் மறு ஓரத்தை, இடதுகையில் முதுகுக்கு பின்னால் பிடிக்கவும். மேலும், கீழுமாக, டவலை அசைத்து முதுகை துடைப்பது போல, பத்து நொடிகள் செய்ய வேண்டும். மூன்று முறை இப்படி செய்யவேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-
» எளிய அழகு குறிப்புகள்
» எளிய மருத்துவக் குறிப்புகள்
» எளிய முறையில் எலும்பு தேய்மானத்தை தடுக்க….

Permissions in this forum:
You cannot reply to topics in this forum