தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடற்பயிற்சி செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Go down

உடற்பயிற்சி செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் Empty உடற்பயிற்சி செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Post  meenu Thu Jan 31, 2013 5:44 pm

உடல் குண்டாக இருப்பவர்கள், `பரவாயில்லை. என் உடல் எடையும் குறைந்துவிட்டது' என்று சொல்லும் நிலையை அடையவேண்டும் என்றால் குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும். காலை எழுந்தவுடன் சோம்பேறித்தனத்துடன், `நாளை பார்த்துக்கொள்ளலாம்' என்று நினைக்காமல், தினமும் உடற்பயிற்சிக்கு செல்லவேண்டும். சிலர் ஒல்லியான உடல்வாகுடன் காணப்படுவார்கள்.

அவர்களுக்கு தங்கள் உடல் எடையை சற்று அதிகரித்தால் நல்லது என்ற எண்ணம் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் `வெயிட் டிரைனிங்' போன்ற கண்டிசனிங் பயிற்சிகளை பெறவேண்டும். நிபுணரின் ஆலோசனையை பெற்று அதற்கு தகுந்தபடி உணவையும் உண்டால், சில மாதங்களில் அவர்கள் உடல் பூசி மெழுகினாற்போல் ஆகி விடும்.

குண்டான உடல் எடையை குறைக்க பயிற்சி பெறும்போது சிலருக்கு இரண்டு மாதத்திலே நல்ல மாற்றங்கள் தெரிந்துவிடும். அதனால் தானும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜிம்முக்கு போனால் போதும் என்று நினைத்து விடக்கூடாது. ஒவ்வொருவர் உடலுக்கு தக்கபடி பயிற்சி பெறவேண்டும்.

அவரவர் உடல்வாகுக்கு தகுந்தபடியே, உடலில் மாற்றங்கள் ஏற்படும். புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள், சுய பயிற்சிகளை தவிர்த்து ஜிம்முக்கு சென்று பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு உடற்பயிற்சியினை மேற்கொள்ளவேண்டும். அதுதான் சரியான வழிமுறையாக இருக்கும். ஜிம்முக்கு போகும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ட்ரெட் மில், சைக்கிளிங் போன்ற பயிற்சி கருவிகளை வாங்கி வீட்டிலே வைத்து பயிற்சி மேற்கொள்ளலாம்.

மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, ஸ்கிப்பிங் செய்வது போன்றவைகளும் நல்ல உடற்பயிற்சிகளே. ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்களில் இரண்டு வாங்கி, இரண்டு கைகளிலுமாக பிடித்துக்கொண்டு ஸ்டென்ர்த் எக்சசைஸ் செய்வதும் நல்ல பலன்தரும். ஜிம் தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. நல்ல பயிற்சியாளர், தரமான பயிற்சி கருவிகள் இருக்கவேண்டும். தேவையான வெளிச்சம், காற்றோட்டமும் இருப்பது நல்லது.

மனதுக்கு உற்சாகமும், பாசிட்டிவ் எனர்ஜியும் கிடைக்கும் விதத்தில் ஜிம் அமைந்திருக்க வேண்டும். அதிகாலையில் உடற்பயிற்சி பெறுவதே சிறந்தது. உடற்பயிற்சிக்கு பிறகுதான் மற்ற வேலைகள் என்று, அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். காலையில் பயிற்சி செய்தால் அன்று முழுவதும் உடல் உற்சாகமாக இருக்கும். பத்து நிமிடம் முதல் நாள் பயிற்சி பெற்று விட்டு, பின்பு நாளுக்கு நாள் நேரத்தை அதிகரிக்கவேண்டும். வாரத்தில் ஐந்து, ஆறு நாட்கள் ஒரு மணி நேரத்திற்கு குறையாத அளவிற்கு பயிற்சி பெற வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum