மனவலிமை தரும் உடற்பயிற்சி
Page 1 of 1
மனவலிமை தரும் உடற்பயிற்சி
இன்றைய கணினி உலகில் உடற்பயிற்சி செய்ய எங்கு நேரம் இருக்கிறது. ஆனால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம். இரண்டு கால்களுக்கு இடையில் சிறிது இடைவெளி விட்டு, பார்வையை நேராக வைத்துக்கொண்டு நிமிர்ந்து நிற்கவும். தரையில் உள்ள ஒரு இரும்புப் பட்டையைத் தூக்குவதுபோல கற்பனை செய்துகொள்ளவும். இப்போது அதைச் செய்வதற்கு முன்பாக, மூச்சை நன்றாக இழுத்துக்கொண்டு, மெதுவாக முன்புறமாக வளைந்து இரு உள்ளங்கைகளும் தரையில் படுமாறு செய்யவும்.
இப்போது, மெதுவாக மூச்சை வெளியிட்டவாறு, வாயைத் திறந்து “ஆ................................ஹா”! என்று சத்தமாகச் சொல்லவும். உங்களால் முடிந்தவரை சத்தமாகச் சொல்லவும். இந்தப் பயிற்சியானது உங்களின் முக இறுக்கத்தைக் குறைத்து, முகத்தசைகளுக்கு ஓய்வு அளிக்கின்றது. பழைய நிலைக்கு மீண்டும் திரும்பிய பிறகு, நேராகவும் நிமிர்ந்தும் நின்றுகொண்டு, முதுகை லேசாக பின்புறம் வளைத்து, கைகளை தலைக்கு மேலே தூக்கி, கண்களை மேல்நோக்கிப் பார்த்து, மார்பை நன்றாக விரித்து, விரல்களைத் திறக்கவும்.
இதுவே ஒரு முழுப்பயிற்சி. சிறந்த பயனைப் பெறுவதற்கு ஒரு நாளைக்கு 10 முறை இவ்வாறு செய்யவும். உடலில் உள்ள அனைத்து வலிகளும் பறந்துபோகும். உடலின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்தி, முதுகெலும்பு மிருதுவாகவும் வலிமையாகவும் இருக்கச் செய்கிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மனவலிமை மனவலிமை
» சக்தி தரும் உடற்பயிற்சி
» ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சி
» உடற்பயிற்சி தரும் உற்சாகம்:
» நன்மை பல தரும் உடற்பயிற்சி
» சக்தி தரும் உடற்பயிற்சி
» ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சி
» உடற்பயிற்சி தரும் உற்சாகம்:
» நன்மை பல தரும் உடற்பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum