வீட்டு சாதனங்களில் இருக்கு உடற்பயிற்சி
Page 1 of 1
வீட்டு சாதனங்களில் இருக்கு உடற்பயிற்சி
பருவத்தின் தலைவாயிலில் இருக்கும்போது உடல் சிக்கென்று இருக்கிறது. நமது வடிவழகைக் கண்ணாடியில் பார்த்து நாமே லேசாக வெட்கத்துடன் ரசிக்கிறோம். நம் நடை உடை பாவனைகளில் தன்னம்பிக்கை மிளிர்கிறது. உலகமே ஓர் உற்சாகப் பந்தாகத் தெரிகிறது.
ஆனால்... இவை எல்லாம் எவ்வளவு காலம்? வேலை, அலைச்சல், குடும்பம், குழந்தை என்று சம்சார சாகரத்தில் மூழ்கிவிட்ட நம் போன்ற எத்தனை பெண்கள் முப்பது வயதுக்கு மேல், நம் உடலைக் கனகச்சிதமாக வைத்திருக்கிறோம்? யோசித்துப் பாருங்கள்... 10 சதவிகிதம்கூடத் தேற மாட்டோம். 'இன்றைய பரபரப்பான வாழ்க்கைமுறையில், உறங்கவோ, ஓய்வு எடுக்கவோகூட நம்மில் பலருக்குப் போதுமான நேரம் இல்லை.
இதற்கு நடுவில், எப்படி உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுவது? என்று அலுத்து சலிக்கும் பெண்களில் ஒருவரா நீங்கள்? கவலையே வேண்டாம்... ''நம் வீட்டில் இருக்கும் இருக்கை, சோஃபா போன்ற பொருட்களை வைத்துப் பயிற்சிகள் செய்தாலே போதும்... நம் உடலில் உள்ள தேவை இல்லாத சதைப் பகுதிகளைக் குறைத்து இளமை கொஞ்சும் எழிலுடன் இருக்கலாம்.
''யாருக்கு என்ன மாதிரியான பயிற்சி தேவை என்ற விவரங்களை உடற்பயிற்சி ஆலோசகரிடம் பெற்று, முறையாகப் பயிற்சிகளில் ஈடுபடலாம். காலை வேளையில் இந்தப் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. மாலை வேளையாக இருந்தால், சாப்பிட்டு முடித்து இரண்டு மணி நேரம் கழித்து பின்னர் இந்த உடற்பயிற்சிகளைச் செய்வது நல்லது.
நமது வீட்டில் இருக்கும் நாற்காலி, சோஃபா போன்றவைகூட முக்கியமான உடற்பயிற்சிக் கருவிகள்தான். பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு, அவற்றைப் பாதுகாப்பாக, நகர முடியாதபடி வைத்துவிட வேண்டும். இந்தப் பயிற்சிகளை வாரத்திற்கு மூன்று நாட்கள் செய்தாலே போதும். ஒரு நாளைக்கு இந்தப் பயிற்சியை உரிய இடைவெளிவிட்டு 90 முறை செய்தால், உடல் சிக்கென இருப்பதை நீங்களே உணர்வீர்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அலர்ஜியால் அவஸ்தபடுறீங்களா? ஈஸியான வீட்டு மருந்து இருக்கு...
» காய்கறியில் என்ன இருக்கு?
» அலர்ஜியால் அவஸ்தபடுறீங்களா? ஈஸியான வீட்டு மருந்து இருக்கு...
» காய்கறியில் என்ன இருக்கு?
» ‘பி்ன்னாடி’ என்ன இருக்கு?!?
» காய்கறியில் என்ன இருக்கு?
» அலர்ஜியால் அவஸ்தபடுறீங்களா? ஈஸியான வீட்டு மருந்து இருக்கு...
» காய்கறியில் என்ன இருக்கு?
» ‘பி்ன்னாடி’ என்ன இருக்கு?!?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum