வளையும் தன்மை தரும் பயிற்சிகள்
Page 1 of 1
வளையும் தன்மை தரும் பயிற்சிகள்
மனிதவாழ்வில் எல்லோருக்கும் உடலின் வளைவுத்தன்மை ( flexibility ) வயதாக வயதாக குறைந்துக்கொண்டே வரும். காலப்போக்கில் முதுகுத்தண்டானது வளைவு பெற்று குறுக ஆரம்பித்துவிடும் இதுவே வயதான காலத்தில் கூன் விழுவதற்கான காரணம்.. யோக பயிற்சியின் அடிப்படையே முதுகெலும்பை நேராக இருத்தி வைத்தே பயிற்சிகள் பயிற்றுவிக்கப்படும்..
யோகப்பயிற்சியை அடிப்படையாக கொண்ட ப்ளோர் எக்ஸர்சைஸை முறையாக செய்பவர்களுக்கும் உடலின் வளைவுத்தன்மை நன்றாகவே இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்... இன்றைய நாகரீக வாழ்வின் பரிசாக மனிதர்கள் பலரும் முதுகுவலியால் அவதிக்குள்ளாகுகின்றனர்...
முதுகு வலிக்கு தற்போது மருத்துவர்கள் பலரால் சிபாரிசு செய்யப்படும் சில பயிற்சிகளை காண்போமாக. இவற்றை ஜசோமெட்ரிக் பயிற்சி என்கின்றோம் ஒரு விரிப்பில் திரும்பி படுத்துக்கொண்டு கைகளை தோள்களுக்கு பக்கத்தில் ஓய்வாக வைக்கவும்.
இப்போது தலையை மட்டும் சற்று உயர்த்தி 30 முதல் 60 நொடிகள் வைத்திருந்து பின் தலையை கீழிறக்கவும்.. 5 வினாடிகள் ஒய்வுக்கு பிறகு மீண்டும் இதே போன்று பயிற்சி செய்யவேண்டும். இவ்வாறு 5 முறை செய்யலாம்.
• இதே நிலையில் வலது காலையும், இடது கையையும் தூக்கி 30 முதல் 60 நொடிகள் வைத்திருக்கவும். பின் இடது காலையும், வலது கையையும் தூக்கி நிறுத்தவும் .. இந்த நிலையில் சில நிமிடங்கள் இருந்து பழைய நிலைக்கு வரவும். இது கீழ் இடுப்பு தசைகளுக்கு நல்ல வலுவினை தரும். மேலும் கைகளை ஊன்றி முதுகினை வளைத்து மேல் நோக்கி பார்க்கலாம். இந்த நிலையில் மூச்சு விடுதல் சீராக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.
இப்பயிற்சிகளை முதலில் 15 நிமிடங்களுக்கு பயிற்சி செய்து படிப்படியாக 30 முதல் 60 நொடிகள் வரை செய்ய முயற்சிக்கலாம். எல்லா பயிற்சிகளும் முதலில் செய்ய ஆரம்பிக்கும் போது சில நொடிகள் மட்டுமே செய்ய வேண்டும். பின் உங்கள் உடல் நிலை ஒத்துழைத்தால் மட்டுமே மேலும் முயற்சிக்கலாம். தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்ற பின்பே எந்த பயிற்சியானாலும் மேற்கொள்வது நலம் பயக்கும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வளையும் தன்மை தரும் உடற்பயிற்சி
» வளையும் தன்மை தரும் உடற்பயிற்சி
» ஆரோக்கியம் தரும் கண் பயிற்சிகள்
» முதுகொழும்புக்கு பலன் தரும் ப்ளோர் பயிற்சிகள்
» சுறுசுறுப்பை தரும் யோகா பயிற்சிகள்
» வளையும் தன்மை தரும் உடற்பயிற்சி
» ஆரோக்கியம் தரும் கண் பயிற்சிகள்
» முதுகொழும்புக்கு பலன் தரும் ப்ளோர் பயிற்சிகள்
» சுறுசுறுப்பை தரும் யோகா பயிற்சிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum