தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடப்பது நல்லது!

Go down

நடப்பது நல்லது! Empty நடப்பது நல்லது!

Post  amma Thu Jan 31, 2013 2:33 pm


நமது இயல்பான வாழ்க்கைக்கு உணவும், உழைப்பும் அத்தியாவசியம். அதைப் போல பயிற்சிகளும், இயற்கை உணவுகளும் இனிய வாழ்வுக்கு உத்தரவாதம் தரும். கடின உழைப்பும், விளையாட்டும் செரிமானத்தை எளிதாக்குகின்றன, உடல் உறுப்புகள் கழிவுகளை வெளியேற்ற உதவுகின்றன.

நல்ல உடல் உழைப்பு, மனஇறுக்கம், அழுத்தத்தைப் போக்குகிறது. மகிழ்ச்சி தரும், சுகம் தரும் ஹார்மோன்களை சுரக்கச் செய்கின்றன. உடலியல் செயல்பாடுகள் மேம்படுகின்றன. நன்றாகப் பசி எடுக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது. எனவே நமது அன்றாட வாழ்வில் ஆயுள் முழுவதும் கடின உழைப்பு அல்லது விளையாட்டு, கராத்தே, யோகா, உடற்பயிற்சிகள், ஓட்டம், தோட்டப் பணிகள் போன்றவை அவசியம்.

ஆனால் இன்றைய அவசர, அதிவேக உலகில் இவற்றை அன்றாடம் மேற்கொள்ளத் தயங்குகிறோம், சோம்பல் படுகிறோம், மறந்து விடுகிறோம், `நாளை செய்வோமே' என்று தள்ளிப் போடுகிறோம். ஆனால் உடலுக்கு வேலை கொடுக்கும் இந்தச் செயல்பாடுகளை ஒருநாள் தவறவிட்டாலும் நாம் தொடர்வதில்லை என்பதே உண்மை.

இதனால் நமது சுறுசுறுப்புக் குறைகிறது, மெட்டபாலிசம் சீர்குலைகிறது, உடல் திசுக்களில் லேக்டிக் அமிலம் சேர்ந்து தசை இறுக்கத்தை அதிகரிக்கிறது. மன அழுத்தம் கூடுகிறது. சோம்பல், சோர்வு அதிகரித்து, வாழ்வில் உத்வேகம் குறைகிறது. நோய்கள் எல்லாம் நம்மை எளிதில் தாக்குகின்றன.

எனவே உடல் உழைப்புப் பணிகள், விளையாட்டு, உடற்பயிற்சிகள் ஆகியவற்றில் ஈடுபட முடியாத நிலையில் நாம் நடைப் பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும். சுறுசுறுப்பான நடைப் பயிற்சியால் ஏற்படும் நன்மைகள் அனேகம். இதன் மூலம், நமது உடல் திசுக்களில் எல்லாம் ரத்த ஓட்டம் மேம்படுகிறது, திசு இறுக்கம், பிடிப்பை உருவாக்கும் லேக்டிக் அமிலம் வெளியேற்றப்படுகிறது.

சுறு சுறுப்பு அதிகரிப்பதுடன், மெட்டபாலிசம், உணவு ஜீரணிக்கப்பட்டு கிரகிக்கப்படுதல் போன்றவை நன்றாக நடைபெறுகின்றன. நீண்டநாள் நோயாளிகளும் கூட ஓரளவு நலம் பெற நடைப் பயிற்சி உதவுகிறது. நடப்பது நமது கால்களுக்கு, உடலுக்கு, மனதுக்கு ஒரு புதிய சக்தியையும், தெம்பையும் தருகிறது.

உடல் நலிவைக் குறைத்து, வலிமை தருகிறது. எவரும், எந்த வயதிலும் நடக்கலாம். எப்போதும் நடக்கலாம். நடை, உடம்பின் ஓர் இயல்பான இயக்கம். அதன் அருமை, பெருமையை உடனடியாக உணர்வோம், அறிவோம். இன்றே நடைப் பயிற்சியைத் தொடங்குவோம்!
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum