வியர்வை வரும் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டுமா?
Page 1 of 1
வியர்வை வரும் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டுமா?
உடல் எடையைக் குறைப்பதற்கு வியர்வை வெள்ளம் போல் கொட்டும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. வியர்வையானது உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதற்கு மட்டுமே உதவும். அது நமது எடையைக் குறைக்க உதவாது.
வேர்வை பொங்க கடுமையான உடற்பயிற்சி செய்த பிறகு நமது உடல் எடை குறைந்தாலும் அது உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தற்காலிக எடை குறைவே ஆகும். இதை விடுத்து உடல் தசைகளுக்கு கடுமையான பயிற்சி கொடுக்காமல் மிதமாக பயிற்சிக் கொடுத்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
நடைப்பயிற்சியில் நாம் ஒடினாலும், நடந்தாலும், நாம் செல்லும் தூரம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒரே அளவு சக்தியைத் தான் செலவு செய்கிறோம். இங்கு வேகம் ஒரு பொருட்டல்ல. ஆனால் 30 நிமிடங்கள் நாம் ஓடும்போது, அதே 30 நிமிடங்கள் நடப்பவரைக் காட்டிலும் அதிக தூரம் கடக்கிறோம்.
தூரம் அதிகமாவதால் நாம் செலவு செய்யும் சக்தியும், எரிக்கும் கலோரிகளும் அதிகமாகின்றன. எனவே அவரவர் வயது மற்றும் உடல் திறனுக்கேற்றவாறு நமது உடற்பயிற்சியை அமைத்துக் கொள்வது அவசியம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» இரண்டாவது திருமணம் செய்ய ஜாதகம் பார்க்க வேண்டுமா?
» வியர்வை வரும் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டுமா?
» எடையை குறைக்க வியர்வை வழிய உடற்பயிற்சி செய்ய வேண்டுமா?
» கேடு வரும் முன்னே கேது திசை வரும் பின்னே ?
» யோகாசனம் செய்ய வேண்டுமா?
» வியர்வை வரும் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டுமா?
» எடையை குறைக்க வியர்வை வழிய உடற்பயிற்சி செய்ய வேண்டுமா?
» கேடு வரும் முன்னே கேது திசை வரும் பின்னே ?
» யோகாசனம் செய்ய வேண்டுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum