தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கொடி இடையைப் பெறுவதற்கான எளிய உடற்பயிற்சிகள்

Go down

கொடி இடையைப் பெறுவதற்கான எளிய உடற்பயிற்சிகள் Empty கொடி இடையைப் பெறுவதற்கான எளிய உடற்பயிற்சிகள்

Post  amma Thu Jan 31, 2013 2:20 pm


சில பெண்கள் பார்க்க அழகாக ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் இடுப்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் அதிக சதை போட்டு அசிங்கமாக இருக்கும். அவர்கள் இந்த எளிய உடற்பயிற்சியை செய்தால் படிப்படியாக இடுப்பு சதை குறைந்து கொடியிடை ஆவதைக் காணலாம். முதலில் படுக்கையை விரித்து அதில் வலது புறம் திரும்பி படுக்கவும்.

வலது கையை தலைக்கு மேல் நீட்டவும், இடது கையை வயிற்றின் முன் பகுதியில் ஊன்றிபடி வைக்கவும். வலதுகாலின் மீது இடதுகால் இருக்குமாறு வைக்கவும். இதே நிலையில் மெதுவாக இடதுகாலை 45 டிகிரி அளவிற்கு உயர்த்தவும். இருபது எண்ணும் வரை மேலே உயர்த்தியவாறு இருக்கவும்.

பின்னர் மெதுவாக ஆரம்பநிலைக்கு வரவும். இதேபோல் இடது பக்கம் திரும்பி படுத்து வலது காலை உயர்த்தவும். இதனால் தொடை, இடுப்பு பகுதிகள் ஒரு வடிவத்திற்கு வரும். ஜன்னலைப் பிடித்துக் கொண்டு இடுப்பைத் திருப்ப வேண்டும்.

கால்களுக்குக் கீழே பவுடரைப் போட்டு வட்டமாகத் திருப்பினால் இடுப்பும் சரியான முறையில் அமையும். இது நல்ல பயிற்சியாகும். தினசரி செய்து வந்தால் கொடியிடையைப் பெறலாம்
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum