தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பயன்கள்

Go down

உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பயன்கள் Empty உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பயன்கள்

Post  amma Thu Jan 31, 2013 2:15 pm


உடற்பயிற்சி என்பதை உச்சரிக்கும் பொழுதே உற்சாகம் தரக்கூடிய வார்த்தை. ஆனால் அந்த உற்சாகம் தொடர வேண்டுமெனில் அதன் பலன் நமக்கு முழுமையாக கிடைக்க வேண்டுமெனில் அதை நடைமுறைப்படுத்துவது உடற்பயிற்சியை செயல்படுத்துவது முக்கியம்.

நான் ரொம்ப பிஸி என அலட்சியம் காட்டும் இயலாத்தனமும் நான் காலையிலிருந்து ராத்திரி வரைக்கும் வேலை செய்கிறேன், மேலும் எதற்கு உடற்பயிற்சி என மருத்துவ உண்மையை ஏற்றுக் கொள்ளாத மனப்பாங்கும், தன்னுடைய உடலை சினிமா நடிகைகளைப் போல் ஆக்க வேண்டும் என்று இளம் பெண்கள் பட்டினி கிடந்து மெலிந்து கிடப்பதும், அதன் மூலம் உடலில் வரக்கூடிய பக்க விளைவுகளும் தொட்டதெற்கெல்லாம் மருந்துகளையும் மாத்திரைகளையும் நாடும் தாய்மார்களும் அதன் மூலம் குறையும் நோய் எதிர்ப்பு சக்தியும் நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மேற்படி நபர்களின் சித்தாந்தங்கள்.

அவர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதை விட பிரச்சனைகள் அதிகமாகவே ஆக்கும். நம்முடைய உடல் எடை இருக்க வேண்டிய அளவை விட அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அது நமது உடற் தகுதியை நேரடியாக பாதிக்கும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலுக்கும், மனதிற்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன. அவை...

1. அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து உடல் எடை சீராகும்
2. கவர்ச்சிகரமான உடல் தோற்றம் கிடைக்கும்
3. உங்களுடைய இருதயமும், நுரையிரலும் பலம் பெறும்
4. வயதின் காரணமாக வரக்கூடிய உடல் உபாதைகள் குறையும்
5. தோற்றப் பொலிவு கூடும்
6. உடல் பலம் கூடும்
7. தன்னம்பிக்கை அதிகரிக்கும்

எனவே மேற்குறிப்பிட்டுள்ள பலன்களை பெற நாம் இப்பொழுதே உடற்பயிற்சி திட்டத்தினை வகுப்பதோடு இல்லாமல், இப்போதே செயல்படுத்துவோம்
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum