காளான் சாதம் காளான் சாதம்
Page 1 of 1
காளான் சாதம் காளான் சாதம்
தேவையான பொருட்கள்:
உதிராக வடித்த சாதம்-1 கப்
பெரிய வெங்காயம்-2
வெங்காய தாள்- சிறிதளவு
இஞ்சி - 1/2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய்-5
மிளகுதூள்- 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்- 2 ஸ்பூன்
காளான் - 250 கிராம்
செய்முறை:
* வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி,பூண்டை சேர்த்து வதக்கவும்.
* காளானை தேவையான அளவில் கட் செய்து நன்கு நீரில் கழுவி அதை வெங்காயத்தில் சேர்த்து வதக்கவும்.
* பின் அதனுடன் மிளகுதூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
* அடுப்பை குறைந்த தீயில் எரிய விட்டு வதக்கவும். பின்னர் அதனுடன் சாதம் சேர்த்து கிளறவும்.
* நன்கு வெந்தவுடன் வெங்காயதாளை பொடியாக நறுக்கி மேலே தூவி இறக்கவும்.
* காளான் சாதம் தயார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum