கொள்ளு சூப் கொள்ளு சூப்
Page 1 of 1
கொள்ளு சூப் கொள்ளு சூப்
தேவையான பொருட்கள்:
கொள்ளு – கால் கப்
மிளகு – 1/2 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
பெருங்காயம் – கால் ஸ்பூன்
பூண்டு – 4 பல்
தக்காளி – 1
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
* முதலில் கொள்ளை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.
* பின்னர் அதனுடன் மிளகு, சீரகம், பெருங்காயம், பூண்டு, தக்காளி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை எல்லாவற்றையும் ஒன்றாக வைத்து அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் இந்த கலவையை 4 கப் தண்ணீரில் கரைத்து 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.
* தண்ணீர் 4 கப் ஆக சுண்டியவுடன் தேவையான அளவு உப்பு, சிறிது கொத்தமல்லித்தழை போட்டு குடிக்கவும்.
* இந்த சூப் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum