தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெந்தயக்கீரை இட்லி

Go down

வெந்தயக்கீரை இட்லி Empty வெந்தயக்கீரை இட்லி

Post  meenu Thu Jan 31, 2013 12:52 pm



தேவையான பொருட்கள்:

இட்லி மாவு - 2 கப்
வெந்தயக்கீரை - 2 கட்டு
பெரிய வெங்காயம் - 1
எலுமிச்சம்பழச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க:

காய்ந்த மிளகாய் - 5
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

தாளிக்க:

கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

• வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில்லாமல் சிவக்க வறுத்துப் பொடித்துக்கொள்ள வேண்டும்.

• கீரையை பொடியாக நறுக்கி அலசிக்கொள்ளுங்கள்.

• வெங்காயத்தையும் பொடியாக நறுக்குங்கள். இட்லி மாவைக் கொண்டு, சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

• எண்ணெய் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், சிட்டிகை உப்பு, மஞ்சள்தூள் சேருங்கள்.

• வெங்காயம் நன்கு வதங்கியதும் கீரையை சேர்த்து, மேலும் நன்கு வதக்குங்கள். பிறகு, பொடித்த பொடியைத் தூவி, இட்லிகளைச் சேர்த்து, எலுமிச்சம்பழச் சாறு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து சூடாகப் பரிமாறுங்கள்.

• இந்த வித்தியாசமான வெந்தயக்கீரை இட்லி ஆரோக்கியமானதாகும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum