தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெந்தயக்கீரை சாதம்

Go down

வெந்தயக்கீரை சாதம் Empty வெந்தயக்கீரை சாதம்

Post  meenu Thu Jan 31, 2013 12:48 pm



தேவையானப் பொருள்கள்:

கீரை - 1 கட்டு
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - பாதி
பச்சை மிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
அரிசி - 2 கப்

தாளிக்க:

கடுகு
உளுந்து
மிளகு - 5
சீரகம் - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 5 பற்கள்
பெருங்காயம் - சிறிது
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

• முதலில் கீரையைக் கழுவி நீரை வடிய வைத்து நறுக்கி வைக்க வேண்டும்.

• ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம்,பச்சை மிளகாய் வதக்கவும்.

• பிறகு தக்காளி சேர்த்து வதக்கி பிறகு கீரை சேர்த்து வதக்கவும்.

• சிறிது நேரத்திலேயே வதங்கி விடும்.இது ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.

• மீண்டும் ஒரு வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து, மிக்ஸியில் உள்ள கீரையில் கொட்டி தேவையான உப்பு சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

• பின்னர் அதை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவை இல்லை.

• 2 கப் அரிசியை வேக வைத்து சாதத்தை வடித்து ஆற வைக்கவும்.

• ஒரு வாணலியில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடுபடுத்தி பெருங்காயம் தாளித்து கீரை மசியலை அதில் கொட்டி அடுப்பை அணைத்து விடவும். அதே சூட்டிலேயே சாதத்தைக் கொட்டிக் கிளறவும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum