தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கொத்தமல்லி துவையல்

Go down

கொத்தமல்லி துவையல் Empty கொத்தமல்லி துவையல்

Post  meenu Wed Jan 30, 2013 5:58 pm


தேவையான பொருட்கள்:-


கொத்த மல்லி- ஒரு கட்டு.
உளுந்த பருப்பு- 1 ஸ்பூன்.
வர மிளகாய்- 2 (காரத்திற்கு தகுந்தமாதிரி எண்ணிக்கை).
புளி- சிறிய நெல்லி அளவு.
உப்பு- சுவைக்கு ஏற்றவாறு.
எண்ணெய்- 2 ஸ்பூன்.

செய்முறை

* கொத்த மல்லியை அலசி சுத்தம் செய்துவிட்டு, இலைகளை மட்டும் தனியாக கிள்ளி வைக்கவும். பின் தண்டுகளை மிக சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து காய்ந்தவுடன் (வெறும் கடாயில்), வர மிளகாய், உலுந்து இவைகளை ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து எடுக்கவும்.

பின் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய தண்டு, மற்றும் ஆய்ந்து வைத்துள்ள இலைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக 2 நிமிடம் வதக்கி, தனித்தனியாக வைக்கவும்.

* மிக்ஸியில் வரமிளகாய், உலுந்து இவைகளை முதலில் அரைத்துவிட்டு, பின் தண்டை சேர்த்து, தேவையான அளவு உப்பு சிறிதளவு நீர் சேர்த்து அரைக்கவும். பின் இலைகளையும் புளியையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

* விருப்பப்பட்டால் கடுகு தாளித்து கொட்டவும். சுவையான துவையல் தயார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum