தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆன்மீகம் என்பது என்ன?

Go down

ஆன்மீகம் என்பது என்ன? Empty ஆன்மீகம் என்பது என்ன?

Post  amma Sat Jan 12, 2013 12:49 pm

மனிதனை விடுதலை அடைந்தவனாக , முழு சுதந்திரம் உடையவனாக, எந்த ஒரு துன்பமும் தன்னை வருத்தாத மன நிலையை அடைந்தவனாக, தன் எதிர்காலத்தை தானே தீர்மானிக்கும் வலிமை உடையவனாக உயர்த்துவது எதுவோ, அதுவே ஆன்மீகம்.

இதை நாம் சொல்கிறோம் என்றால் அதற்க்கு முன்பாகவே நாம் தீர்மானித்து என்ன என்றால் – எல்லா உயிர்களும் அடிமை நிலையிலே, தங்கள் நிலையை, எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் வலிமை இல்லாதவராக, பல வகையான துன்பங்கள் தங்களை வந்து தாக்கும் நிலையிலே உள்ளனர் (prone to sorrow) என்பதாகும்.

எல்லா உயிர்களையும் பீடித்துள்ள மூன்று முக்கிய துன்பங்கள், பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவை.
இந்த‌ சாவு, நோய் ஆகிய‌ பிர‌ச்சின‌க‌ள் ம‌ட்டும் அல்லாம‌ல் இன்னும் எத்த‌னையொ பிரச்சினைக‌ள் ந‌ம்மை வ‌ந்து தாக்குகின்றன.
வாய்க்கால் , வரப்பு தகராறு, பையனுக்கு பள்ளியில் இடம் கிடைக்கவில்லை, நன்கு வேலை செய்தும் அலுவலகத்தில் இன்னொருவனுக்கு பிரமோசன், மனைவிக்கு உடல் நிலை சரியில்லை, அம்மா- மனைவி தகராறு, …… பிரச்சினைக்கு , துன்பங்களுக்கு பஞ்சமில்லை. எல்லா பிரச்சினையும் பேசித் தீர்க்கலாம்யா, தைரியமாக இரு- ஆனால் எத்தனை முயற்சி செய்தாலும், பகுத்தறிவின் அடிப்படையிலே அறிவியல், மனோவியல், பொருளாதாரம், பொறியல், அவியல்…எதை பயன்படுத்தி எவ்வளவு அறிவு பூர்வமாகப் போனாலும், அதையும் தாண்டி துன்பம் வந்து சேருவதை நம்மால் தடுக்கும் வலிமை உடையவராக இருக்கிறோமா?

நாம் இந்த உலகத்திலே சில வெற்றிகளை பெற்று விடுகிறோம், அதனால் நாம் வலிமை உடையவராக, எல்லா துன்பங்களையும் விரட்டி அடைக்கும் சக்தி படைததவர்க்க இருப்பதாக நாமே கற்பனை செய்து கொண்டு ஏமாந்து விடுகிறோம் என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது.

அப்படி ஏதோ குறைவான துன்பம் இருக்கும் வாழ்க்கையை வாழும் வாய்ப்பு நமக்கு அதிர்ஷ்டவசமாக கிடைத்தாலும், பாடுபட்டு தேடி சேர்த்த சொத்து, பணம், கவரவம், உறவு, நண்பர்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு செல்லும் நிலையிலேயே இருக்கிறோம். All the properties. wealth, friends, relatives, prestige…etc shall be removed once for all, (irrevokabaly removed) from us.
இரக்கமற்ற இயற்கையின் இரக்கத்தை நம்பி வாழ்கிறோம். We are at the mercy of a system which has no mercy.

நாம் இந்த உலகத்திலே சில வெற்றிகளை பெற்று விடுகிறோம், அதனால் நாம் வலிமை உடையவராக , எல்லா துன்பங்களையும் விரட்டி அடைக்கும் சக்தி படைததவர்க்க இருப்பதாக நாமே கற்பனை செய்து கொண்டு ஏமாந்து விடுகிறோம் என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது.
ப‌ணமோ, த‌ங்க‌மோ, செல்வாக்கோ, ப‌த‌வியோ-இந்த‌ உல‌கத்தில் ம‌க்க‌ள் அடைய‌ விரும்பும் எந்த‌ பொருளும்- அவ‌ர்க‌ளைக் காக்க‌ முடியாது என்ப‌து தானே ஆன்மீக‌த்தின் அடிப்ப‌டை.

தொண்ணூராயிர‌ம் கோடி ரூபாய் ம‌திப்புள்ள சொத்துக்க‌ள், திருபாய் அம்பானியை ம‌ர‌ண‌த்தில் இருந்து காக்க‌ முடிந்த‌தா?
ஆஃப்கானில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ குழுவிட‌ம் சிக்கிய‌ ஒருவ‌ரை அமேரிக்க‌, ருஷிய‌, சீன‌, இந்திய‌ நாடுக‌ள் கூட்டாக‌ அறிக்கை விட்டாலும் காக்க‌ நமுடியுமா? அப்ப‌டி மாட்டிக் கொள்ளாம‌ல் அவ‌ர் “ப‌த்திர‌மாக”‌வீட்டில் இருந்தாலும் அவ‌ர் எத்த‌னை நாள் சாகாம‌ல் “ப‌த்திர‌மாக”‌இருக்க‌ முடியும்? ந‌ம் நெருன்கிய‌ உற‌வின‌ர்க‌ள் சாகும் நிலையில் இருந்தால் அழுவ‌த‌த் த‌விர‌ ந‌ம்மால் ஆவ‌து வேரென்ன‌?

எந்த‌க் க‌ட‌வுளாவது இந்த‌ உல‌க‌த்தில் எந்த‌ ம‌னித‌னையோ, மிருக‌த்தியோ எப்போதும் சாகாம‌ல் க‌ப்பாற்றீ வைத்து இருக்கிறாரா?
பிரச்சினைக‌லுக்கு அடிமையாக‌ வாழ்ந்து, நோயால் வ‌ருந்தி, க‌டைசியில் சாகும் நாம், ந‌ம்முடைய‌ வாழ்க்கைய‌ நாமே தீர்மானிக்கும் வ‌லிமை உடைய‌வ‌ராக‌, அடிமை நிலையிலிருந்து முழு விடுத‌லையான‌ நிலையை, அதாவ‌து எந்த‌ துன்ப‌மும் ந‌ம்மை தாக்க‌ முடியாத‌ அள‌வுக்கு முழு விடுத‌லையான‌ நிலையை அடைய‌ முடியுமா?
நான் உட்ப‌ட இந்த‌ உல‌கிலுள்ளா எல்லா ம‌னித‌ர்களூம், கொடுமையான‌ இய‌ற்க்கையின் கையில் சிக்கி த‌விக்கும் அடிமை நிலையில் உள்ளதாக‌வே நான் க‌ருதுகிரேன்.

உட‌ல் இற‌க்கும் போது, உயிர் தொட‌ர்ந்து வாழ்ந்தாலும் ச‌ரி, இல்லை உயிரும் சேர்ந்து அழிந்தாலும் ச‌ரி - எப்ப‌டியாக‌ இருப்பினும் நாம் ந‌ம்மைக் காக்க‌ இய‌லாத‌ அடிமை வாழ்க்கை வாழ்கிரோம்.

அர‌ச‌னோ, ஆண்டியோ, செல‌வ்ந்த‌னோ, அறிங்க‌னோ, பாம‌ர‌னோ, ஏழையோ, வெள்ளைக் கார‌னோ, க‌றுப்ப‌னோ, ம‌னித‌னோ, மாடோ எல்லோரும் அடிமை நிலையில் இருப்ப‌தாக‌வே நாம் தீர்மானிக்கலாம். இது ஒரு PROBLEM .
இத‌ற்க்கு SOLUTION த‌ருவ‌து எதுவோ அதுவே ஆன்மீக‌ம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum