தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அவனுக்கு தெரியாதா எப்போ, யாருக்கு, என்ன, ஏன் கொடுக்கணும் என்பது?

Go down

அவனுக்கு தெரியாதா எப்போ, யாருக்கு, என்ன, ஏன் கொடுக்கணும் என்பது? Empty அவனுக்கு தெரியாதா எப்போ, யாருக்கு, என்ன, ஏன் கொடுக்கணும் என்பது?

Post  ishwarya Mon Feb 18, 2013 1:16 pm

மார்கழி மாசம் ஆரம்பிச்சதுல இருந்து நானும் நண்பர் மாரீஸ் கண்ணனும் விஸ்வரூப தரிசனத்துக்காக (கோவல் திறந்தவுடன் கிடைக்கும் முதல் தரிசனம்) தினமும் நந்தம்பாக்கம் கோதண்டராமர் கோவிலுக்கு போய்கிட்டிருக்கோம். இது பற்றி ஏற்கனவே உங்ககிட்டே சொல்லியிருக்கேன். பேர் தான் கோதண்டராமர் கோவில். மற்றபடி இங்கே ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் தான் மெயின் DEITY. (ராமருக்கு தனி சன்னதி இருக்கு).

தினமும் காலை 5.30 மணிக்கு கோ-பூஜையுடன் கூடிய விஸ்வரூப தரிசனத்தை முடித்து, பின்னர் தீர்த்தப் பிரசாதம் மற்றும் குங்குமப் பிரசாதம் வாங்கிக்கொண்டு தான் திரும்ப வருவோம். நேரம் இருக்குற அன்னைக்கு திருப்பாவை பாராயணத்துல உட்கார்ந்துடுவோம்.

நேற்றைக்கு வைகுண்ட ஏகாதேசி என்பதால் விஸ்வரூப தரிசனம் ஒரு மணி நேரம் முன்னதா அதாவது காலை 4.30 மணிக்கும் சொர்க்கவாசல் திறப்பு 5.30 மணிக்கும் ஷெட்யூல் பண்ணியிருந்தாங்க.

அதனால வழக்கமா கிளம்பும் நேரத்தைவிட கொஞ்சம் சீக்கிரமே கோவிலுக்கு கிளம்பிட்டோம். எனக்கு நைட் கண் முழிச்சதால கொஞ்சம் தூக்க கலக்கமா இருந்தது. கோவில்ல நுழையும்போது 4.10 அலது 4.20 இருக்கும்.

தினமும் மூலஸ்தானத்து கதவு திறக்கிறதுக்கு முன்னமே நாங்க போய்டுவோம். அப்புறம் தான் ஒவ்வொரு கதவாக திறக்கப்பட்டு, சுப்ரபாதம் இசைக்கப்பட்டு, ஒவ்வொரு நிலைக்கும் ஆரத்தி காட்டிக்கிட்டே இருப்பாங்க. ஒவ்வொரு கதவாக இப்படி திறந்து கடைசீயில் பெருமாள் சன்னதியின் ஸ்க்ரீனை விலக்குவார்கள். ஆரத்தி காட்டுவாங்க. அப்புறம் வெளியே வந்து கருடாழ்வருக்கு முன்னே (மூலவருக்கு எதிர்புறம்) கோ-பூஜை நடக்கும். அப்புறம் தீர்த்தப் பிரஸாதம் குங்குமம் இதெல்லாம் கொடுப்பாங்க. பெருமாளுக்கு நிவேதனம் பண்ணின குங்குமப் பூ பால் கொடுப்பாங்க. (தேவாமிர்தம் தோத்துடும் போங்க.)

நேற்றைக்கு பார்த்தீங்கன்னா….நாங்க 4.20க்கு போகும்போது எங்களுக்கு முன்னாடியே ஒரு 20 பேர் நிக்கிறாங்க. மூலஸ்தானத்து முதல் வாசப்படி கதவு திறந்திருந்தது. “ஆஹா.. விஸ்வரூபம் தரிசனம் போய்கிட்டிருக்கு போல.. இன்னைக்குன்னு பார்த்து மிஸ் பண்ணிட்டோமோ…” அப்படின்னு மனசு பகீர்னு அடிச்சிகிச்சு.

திமு…திமு….திமுன்னு ஒரே ஓட்டமா ஓடினோம். அதுல எனக்கிருந்த தூக்கமெல்லாம் பறந்தே போச்சு.

“மூலஸ்தானம் இன்னும் திறக்கலை. இனிமே தான் விஸ்வரூப தரிசனம்” அப்படின்னு சொன்னாங்க. ஹப்பாடா…. அப்படின்னு இருந்திச்சு. நாங்க போய் நிக்கிறதுக்கும் பசுமாடு + கன்று ரெண்டையும் கூட்டிகிட்டு வந்து கட்டுறதுக்கும் சரியா இருந்தது.

கரெக்டா 4.35 மணிக்கு சுப்ரபாதம் இசைக்கப்பட்டு மூலஸ்தானம் திறக்கப்பட்டது.

ஒவ்வொரு கதவா திறந்துட்டு போய் (பக்தி படங்கள்ல எல்லாம் காட்டுவாங்களே… அது மாதிரி) ஸ்க்ரீனை அர்ச்சகர் விலக்குறார்…அங்கே பெருமாள் திருமலையில் இருக்குற மாதிரி திவ்ய அலங்காரத்துல மின்னல் மாதிரி காட்சி தர்றார். மத்த நாள் எல்லாம்… மெயின் மூர்த்தத்தை ஸ்க்ரீன்ல மறைச்சு வெச்சிருப்பாங்க. (சந்தனக் காப்பு இருக்கும்). அவருக்கு முன்னால இருக்குற உற்சவரைத்தான் தான் நாங்க தினமும் தரிசனம் பண்ணுவோம். உற்சவருக்கு தான் திருப்பள்ளி எழுச்சி நடக்கும். ஆனா இன்னைக்கு வைகுண்ட ஏகாதேசி என்பதால் உற்சவர், சொர்க்கவாசல்ல போறதுக்கு வெளியே வந்துட்டார். அதனால மெயின் மூர்த்ததுக்கு திவ்ய அலங்காரம் (சாமந்திபூ + வைர ஆபரண அலங்காரம்) பண்ணியிருந்தாங்க. ஸ்க்ரீனை விலக்கினதும் “கோவிந்தா…கோவிந்தா…கோவிந்தா…” அப்படிங்கிறது மட்டும் தான் என் காதுல கேட்குது.
ஆரத்தி காட்டும்போது அந்த ஜோதியோட வெளிச்சம் வைர ஆபரணங்கள் மேல பட்டு தக தகன்னு மின்னுது. வைகுண்ட ஏகாதேசி அன்னைக்கு பிரம்ம முஹூர்த்ததுல இப்படி ஒரு தரிசனமா…… என்னையுமறியாமல் கண்களில் நீர் வந்துவிட்டது. “இப்படி ஒரு தரிசனத்துக்கு நன்றி ஐயனே!!” என்று மனம் நன்றி கூறிக்கொண்டே இருந்தது.

ஆரத்தி காட்டும்போது அந்த ஜோதியோட வெளிச்சம் வைர ஆபரணங்கள் மேல பட்டு தக தகன்னு மின்னுது. வைகுண்ட ஏகாதேசி அன்னைக்கு பிரம்ம முஹூர்த்ததுல இப்படி ஒரு தரிசனமா…… என்னையுமறியாமல் கண்களில் நீர் வந்துவிட்டது. “இப்படி ஒரு தரிசனத்துக்கு நன்றி ஐயனே என்று மனம் நன்றி கூறிக்கொண்டே இருந்தது.

திருப்பதியில் மூலஸ்தானத்துக்கு முன்னால ஒரு பத்து நிமிஷம் நிக்க வாய்ப்பு கிடைச்சா எப்படியிருக்கும்… அப்படி இருந்தது… அந்த நேரம் அந்த தரிசனத்தை பார்க்க மொத்தம் ஒரு 50 – 60 பேர் இருந்தாங்க.

இரண்டு பக்கமும் தடுப்பு ஏற்படுத்தி தடுப்புக்கு அப்புறமா நின்னு தான் சுவாமியை பார்க்கமுடியும். ஆனா ரெண்டு பக்கமும் நின்னு தரிசனம் பண்ணினவங்க… நகர மனசில்லாம அங்கேயே நின்னுக்கிட்டுருந்தாங்க. அந்தே நேரத்துல சில பெண்கள் தரிசனம் பண்ண ஆவலா ஓடி வந்தாங்க. ஆனா அவங்களால முடியலே. கொஞ்சம் கூட கேப் கிடைக்கலே. அவங்க தவிப்பை நான் பார்த்ததும், நாம தான் திருப்தியா தரிசனம் பண்ணிட்டோமோ. மத்தவங்களும் பண்ணட்டும் அப்படின்னு, “அம்மா இங்கே வாங்க… அப்படின்னு சொல்லி அவங்க மூணு பேரையும் கூப்பிட்டு, என் இடத்தை கொடுத்தேன். அங்கே ஒவ்வொருத்தரா நின்னு சுவாமியை தரிசனம் பண்ணாங்க. அவங்களுக்கு ஒரே சந்தோஷம். எனக்கு அதை விட. நாம் பெற்ற இந்த இன்பம் மற்றவர்களும் பெறட்டுமே…

அதுக்கு பிறகு கோ-பூஜை நடந்தது. மார்கழி 1 ல இருந்து தினமும் இதை பார்க்குறோம். கொஞ்சம் கூட சலிக்கலை. ஒவ்வொரு முறையும் அது கடந்த எட்டு நாளா கோ-பூஜை ஒரு இனிமையான விஷயம் தான்.

நேரம் செல்ல செல்ல கூட்டம் வந்துகொண்டே இருந்தது. சொர்க்கவாசல் திறப்புக்கான நடைமுறைகள் மற்றும் பூஜைகளை செய்யவேண்டும் என்பதால் அப்புறம் கொஞ்ச நேரத்துல மூலவர் சன்னதியை மட்டும் சாத்திட்டாங்க… வெளியே வந்து சொர்க்க வாசல் திறப்புக்காக காத்திருந்தோம்.

மேளதாள மங்கள இசை சூழ்நிலையை களைகட்ட வைத்தது.

5.00 மணி இருக்கும்… பெரியா கூட்டம் வந்துடுச்சு. கூட்டம்னா கூட்டம் அப்படியொரு கூட்டம். உற்சவரை வெளியே கொண்டு வந்து பிரகாரத்தை நாதஸ்வர மேல தாளத்தோட சுத்தி வந்தாங்க. கேட்க கேட்க தெவிட்டாத ஒரு இசை அது. அந்த மேள சத்தம் இன்னும் மனசுல இருந்து விலகலை.

நம்பெருமாள் பிரகாரத்தை சுத்தி வந்ததும் சொர்க்கவாசல் முன்னாடி அவரை ஒரு மேடையில அமரவேச்சு கொஞ்ச நேரம் பூஜைகள் நடந்துது.

நேரம் போகப் போக கூட்டம் வந்துகிட்டே இருந்தது. கூட்டத்துல நானும் நண்பரும் பிரிஞ்சிட்டோம். இன்னும் கொஞ்ச நேரத்துல நம்பெருமாள் சொர்க்கவாசல் உள்ளே போகப் போறார். நண்பர் மாரீஸ் கண்ணன் எதிர்புறம் இருந்தார். “இந்தப் பக்கம் வந்துடுங்க”ன்னு சைகை காட்டுறார். ஆனால் நான் நகரக்கூட முடியாத அளவு கூட்டத்துக்கு நடுவுலே மாட்டிகிட்டிருக்கேன்.

இன்னும் கொஞ்ச நேரத்துல பெருமாள் சொர்க்க வாசல் போகப்போறார் என்பதால பெருமாளை தூக்கி வர்றதுக்கு சௌகரியமா வாசலுக்கு முன்னாடி கூட்டத்தை கொஞ்சம் ஒழுங்கு படுத்தினாங்க. அந்த கேப்ல நான் எதைப் பத்தியும் கவலைப்படாம டக்குனு எதிர்புறம் ஒரே தாவு தாவிட்டேன். நண்பர் பக்கத்துல நின்னதும் தான் கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருந்தது.

அடுத்த சில விநாடிகள்ல… “கோவிந்தா…. கோவிந்தா…. கோவிந்தா” என்ற முழக்கங்கள் முழங்க மேள தாள மங்கள வாத்தியங்கள் மந்திரங்கள் இசைக்க பெருமாள் சொர்க்க வாசல் நோக்கி வந்தார். அவரை முன்ன நாலு பேறு பின்னே நாலு பேர் தூக்கிட்டு வந்தாங்க. தவிர சுத்திலும் எக்கச்சக்க கூட்டம்.

என்ன தான் எட்டு பேர் நம்பெருமாளை தூக்கினாலும் அந்த கூட்டத்துல அவங்க கொஞ்சம் சிரமப்பட்டாங்க. அதனால வாசல்கிட்டே வரும்போது நண்பர் ஓடிப்போய் அவரும் தன் பங்குக்கு தூக்க தோள் கொடுத்தார். பார்த்துட்டு இருந்த நானும் ஓடிப்போய் என் பங்குக்கு தோள்கொடுக்க, பெருமாள் சொர்க்க வாசல் கடந்தார். (இதற்கு பேர் தோளுக்கினியான் கைங்கர்யமாம்!)

இதெல்லாம் நடந்தது ஜஸ்ட் A FLASH OF SECONDS தான். அண்டசராசரங்களையும் சுமப்பவனை அந்த காலத்தையே நிர்ணயிப்பவனையும் இந்த எளியவன் சில வினாடிகள் சுமக்க அதுவும் வைகுண்ட ஏகாதேசி அன்று சொர்க்க வாசல் கடக்கும்போது சுமக்க கிடைத்த பாக்கியத்தை என்னவென்று சொல்வேன்….? இனியும் இந்த பிறவி வேண்டுவேனோ? இனியும் நான் சாதிக்க என்ன இருக்கிறது?

நண்பருக்கு ஒரே சந்தோஷம். பரவசம். அவரை விட எனக்கு. ஏன்னா…. இதை நாங்க பிளான் பண்ணில்லாம் செய்யலே…. ஜஸ்ட் அந்த நொடி தோன்றி அடுத்த நொடி கிடைத்த வாய்ப்பு இது.

வெளியே பிரகாரத்தை வலம் வருவதற்கு சுத்தி வர்றோம்… தரிசனத்துக்காக வளைஞ்சி வளைஞ்சி க்யூ நிக்கிது. எப்படியும் ஒரு 500 / 1000 பேர் இருப்பாங்க. நல்லவேளை நாம காலையில விஸ்வரூப தரிசனம் பார்த்துட்டோம். இல்லேன்னா ‘எந்த காலத்துல நாம பார்த்து முடிக்கிறது?’ன்னு தோணிச்சு.

அப்புறம் சுத்தி வந்ததுக்கப்பரும்…. திரும்பவும் கண்ணாடி அறைக்கு பக்கத்துல நிக்கிறோம். மாரீஸ் கண்ணன் குங்குமப்தீர்த்தப் பிரசாதம் வாங்கனும்னு ஆசைப்பட்டார். அங்கே இருந்த நமக்கு தெரிந்த குருக்கள், இப்படி கொஞ்சம் பெருமையா நின்நேல்ல்ன்னா கிடைக்கும். கூட்டத்தை பார்த்தேல்லியோ? என்றார்.

நாம் ஓரமாக நின்றுகொண்டிருக்க, சற்று நேரத்தில் தீர்த்தப் பிரசாதம் தரப்பட்டது அந்த கூட்டத்திலும் முண்டியடித்து வாங்கி அருந்திவிட்டோம்.

சரி பிரகாரத்துல பொய் கொஞ்ச நேரம் உடகாரலாம்னு கிளம்புறோம்…. உடனே வெண்பொங்கல் பிரசாதம் வந்தது. ஆஹா… விட்டுடுவோமா.. விரதமிருந்ததாள ஏற்கனவே பசி வேற. உடனே க்யூல நின்னுட்டோம். முதல்ல வாங்கினது நான். அப்புறம் நம்ம நண்பர். சும்மா அரை கரண்டி தான் கொடுத்தாங்க. ஆனா என்ன ஒரு அற்புத சுவை தெரியுமா? (வீட்டுல செய்றது எல்லாம் ஏங்க இப்படி இருக்க மாட்டேங்குது?)

சாப்பிட்டு… பிரகாரத்துல உட்க்காறோம்…. அர்ச்சகர்கள்ல ஒருத்தர் கற்பூர தீபாராதனை முடிச்சு கற்பூரத்தை ஒரு பெரிய தட்டுல போட்டு எல்லாருக்கும் காட்டிக்கிட்டுருந்தார். தட்டு ரொம்ப சூடாயிடுச்சு போல ஒரு கட்டத்துக்கு மேல அதை கையில தூக்க முடியாம ஒரு ஓரமா படி மாதிரி இருந்த இடத்துல வெச்சிட்டார். கற்பூரத்தை எல்லாரும் ஒத்திக்கிற வரைக்கும் நான் பொறுமையா நின்னுக்கிட்டுருந்தேன். அப்புறம் நான் கண்ணில் ஒற்றிக்கொண்டு நிமிர்ந்தேன். அர்ச்சகர் என்ன நினைச்சாரோ தெரியலே.. கையில கொஞ்சம் பூ வெச்சிகிட்டுருந்தார் என் கிட்டே அதை கொடுத்திட்டார். அட…. சின்ன விஷயம் தான். இருந்தாலும் சந்தோஷமா இருந்தது.

(எல்லாரும் சொர்க்கவாசல் தாண்டினதுக்கு அப்புறம் கூட்டமெல்லாம் குறைஞ்ச பிறகு…நானும் நண்பரும் ஃபோட்டோ எடுத்தோம். அந்த ஃபோட்டோஸ் தான் நீங்க இந்த பதிவுல பாக்குறது).

முதல்ல வரும்போது…. சாமரம் வீச வெச்சி அழகு பார்த்தார் நம்பெருமாள்.

இன்னைக்கு வைகுண்ட ஏகாதேசி அன்னைக்கு தன்னையே தூக்கி சுமக்க வெச்சிட்டார்.

யோசிச்சு பார்த்தேன்…. நண்பருக்கு பெய்த அருள் மழையின் சாரல் தான் என் மேல் அடித்திருக்கிறது என்பது புரிந்தாலும் அதற்கும் ஒரு அருகதை வேணுமே…நமக்கு உண்மையில் அவனை சுமக்க அருகதை இருக்கா? என்றெல்லாம் மனம் சிந்தித்தபடி இருந்தது.

அப்புறம் தான் காரணம் புரிஞ்சது… மத்தவங்களும் பார்க்கட்டுமே அப்படின்னு நினைச்சி… மூன்று பேருக்கு நான் நின்னுகிட்டிருந்த இடத்தை விட்டுக்கொடுத்து அவங்களை தரிசனம் செய்ய வெச்சேன்ல … அதனால வைகுண்ட ஏகாதேசி அன்னைக்கு தன்னையே தூக்கும் அந்த பாக்கியத்தை எனக்கு தந்திருக்கிறார் பெருமாள் என்பது.

எல்லாத்தையும் எந்நேரமும் பார்த்துகிட்டு சிரிச்சுகிட்டே நிக்கிற அவனுக்கு தெரியாதா எப்போ, யாருக்கு, என்ன, ஏன் கொடுக்கணும் என்பது?

எல்லாத்தையும் எந்நேரமும் பார்த்துகிட்டு சிரிச்சுகிட்டே நிக்கிற அவனுக்கு தெரியாதா எப்போ, யாருக்கு, என்ன, ஏன் கொடுக்கணும் என்பது?

ஆன்மிகம், ஆலய தரிசனம் என்பதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் இருந்து வந்தாலும் இது போன்ற விஷயங்களை மெனக்கெட்டு செய்ய எனக்கு உந்துதல் இல்லாது இருந்தது. காரணம் கடந்த கால வாழ்க்கைமுறையும் அதில் எனக்கு லட்சியமாக இருந்த விஷயங்களும் தான். இப்போ இங்கே….சொல்ற நாம நிச்சயம் செய்யனும் அப்போ தான் நாம சொல்றதுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும் அப்படின்னு முடிவு பண்னினதாலே தான் மார்கழி தொடங்கினதுல இருந்து தவறாம விஸ்வரூப தரிசனத்துக்கு போய்கிட்டிருக்கேன்.

என்னமோ தெரியலே… என்னென்னமோ செஞ்சி அவன் பக்கம் என்னை திரும்பி பார்க்க வெச்சிட்டான். இப்படி ஒரு பேரின்பத்தை இத்தனை நாள் மிஸ் பண்ணியிருக்கோமே… அப்படின்னு ஒவ்வொரு நொடியும் மனசு தவிக்குது. இப்போ அவனுக்காக கழிக்கும் ஒவ்வொரு நொடியும் சந்தோஷம் தான். கஷ்டப்பட்டாலும் மெனக்கெட்டாலும் அதில் ஒரு திருப்தியை உணர முடியுது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum