தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நகம் உறுதியாக உடையாமல் வளர

Go down

நகம் உறுதியாக உடையாமல் வளர Empty நகம் உறுதியாக உடையாமல் வளர

Post  meenu Wed Jan 30, 2013 1:31 pm

* தரமானநெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
அப்போது தான் நகத்திற்கு எவ்விதபாதிப்பும் வராது. நெயில் பாலீஷ் வாங்கும்
போது உங்கள் நிறத்திற்கு ஏற்ற கலராக பார்த்து தேர்ந்தெடுங்கள்.

*
சிலருக்கு நகம் கடினத்தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக
இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத்
தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும்.

* அதே
போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக
வெட்டலாம். நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில்
நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்.

*
நகங்களில் அவ்வப்போது ஆலிவ் எண்ணெய் சிறிது எடுத்து மஸாஜ் செய்து
கொள்வதால் நகங்கள் பலப்படும். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது க்ரீம் அல்லது
ஆலிவ் எண்ணெயை எடுத்துக்கொண்டு கைவிரல்களை உருவி உருவித் தேய்த்து மஸாஜ்
செய்து கொள்ள வேண்டும். விரல்களை மஸாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகும்.

*
நகங்கள் உறுதியில்லாமல் அவ்வப்போது உடைந்தாலோ அல்லது தெறித்து விட்டாலோ
உடம்பில் போதுமான அளவு இரும்புச்சத்து அல்லது கால்சியம் சத்து இல்லை
எனத்தெரிந்து கொள்ளலாம். அதிகமாக தண்ணீர் குடிப்பவர்களுக்கு நகங்கள்
உறுதியாக இருக்கும்.

* நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.

*
நெயில் பொலிஷ் போடும் போது, பிரஷ்ஷினால், நகத்தின் அடிப்பகுதியில் நுனி
வரை ஒரே தடவையாக போட வேண்டும். அப்போது தான் அவை பளபளப்பாக எவ்வித
திட்டுகளும் இன்றி அழகாகக் காட்சியளிக்கும்.

*
மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால்,
நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.

*
நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற
சத்துக்குறைபாடுகளே காரணம். தண்ணீரை மிதமாக சூடாக்கி, சிறிது உப்புக்
கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள்
புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

* தினம் நெயில்
பொலிஷ் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கிக் காணப்படும். எனவே
வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நெயில் பொலிஷ் உபயோகிக்காமல்,
இருப்பது நல்லது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum