தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அழகு உங்கள் கையில்.....

Go down

அழகு உங்கள் கையில்..... Empty அழகு உங்கள் கையில்.....

Post  meenu Wed Jan 30, 2013 12:12 pm

செம்பருத்திப்பூ, இலை, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை, கரிசலாங்கண்ணி இவை எல்லாம் குளிர்ச்சி தரும் பொருட்கள். இவைகளைக் கொண்டு மூலிகை எண்ணெய் தயாரித்து தலையில் பூசி வந்தால் உடம்பு சூடு குறையும். கண்ணுக்கும் குளிர்ச்சி தரும்.

* காலையில் நீராகாரம் நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் எட்டு தம்ளர் நீர் பருக வேண்டும். இளநீர், பசுமோர், பழரசங்கள், மூலிகைப் பானங்கள் போன்றவைகளை அருந்தவும்.

* வெந்தயக்கீரை, கொத்தமல்லி இரண்டையும் மையாக அரைத்துத் தலையில் பூசி குளித்தால் கோடையில் தலைமுடி பட்டுப்போல் மின்னும்.

* வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியிலிட்டு கூழாக்கவும்..இந்தக் கூழை ஃப்ரிஜ்ஜில் வைத்து குளிர்வித்து அதன்பின் கண் இமை, முகம், கழுத்து, தோள் பகுதிகளில் பூசிக் கொள்ளுங்கள். இயற்கையான பொலிவு கிடைக்கும்.

* இரவில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெந்தயத்தை மென்று திங்க உடம்பு உஷணம் குறையும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum