குழந்தைகளின் எதிர்காலம் உங்கள் கையில்...
Page 1 of 1

குழந்தை வளர்ப்பு என்பதே ஒரு தனி கலை. பொதுவாக குழந்தைகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்று பெற்றோர் நினைத்தல் கூடாது.
குழந்தைகளை சுதந்திரமாக சிந்திக்க விடுங்கள். சில விஷயங்களில் குழந்தைகளை முடிவெடுப்பதற்கும் சுதந்திரம் அளியுங்கள்,
அவர்களின் போக்கிலேயே சென்று அவர்களுக்கு எது தேவை. எது தேவையில்லை என்பதை உணர்த்துங்கள்.
குழந்தைகளையே முடிவெடுப்பதற்கு அனுமதிப்பதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியாக உணர்கிறார்கள், அந்த மகிழ்ச்சியே அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பிறகும், அவர்களின் ஆரோக்கியத்திற்கு உதவியாக அமையும்.
குழந்தைகளின் ஆக்கத்திறனை (creativity) கூடிய வரையில் ஊக்கப்படுத்துங்கள். குழந்தைகள் ஏதாவது பொருட்களை உடைத்தாலும், அதற்காக கடிந்து கொள்ளாதீர்கள்.
எந்த அளவுக்கு குழந்தைகள் துறுதுறுப்பானவர்களாக இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களின் கல்வி கற்கும் திறனும் இருக்கும். எனவே குழந்தைகளை கட்டுப்படுத்தி, அவர்களின் ஆர்வத்தைக் கெடுக்காதீர்கள். அதே நேரத்தில் உங்கள் கண்காணிப்புடன் அவர்களின் செயல் இருக்கட்டும்.
பெரும்பாலான வீடுகளில் கணவன் - மனைவி கருத்து வேறுபாடுகள் குழந்தைகளிடம் பிரதிபலிக்க நேரிடலாம். அப்படி நிகழ்வதால், குழந்தையின் மனோநிலையில் பாதிப்பு ஏற்படக்கூடும்.
பெரும்பாலும் குழந்தைகள் கேட்பதை வாங்கிக் கொடுக்கப் பாருங்கள். உங்களால், உடனடியாக வாங்க முடியாவிட்டாலும், எதிர்மறையான வார்த்தைகளைக் கூறுவதைத் தவிர்க்கவும். குறிப்பிட்டதொரு காலத்திற்கு நிச்சயம் வாங்கிக் கொடுக்கிறேன் என்று கூறி அவர்களிடம் உங்கள் மீதான நம்பகத்தன்மையை வளருங்கள்,
இதுபோன்ற செயல்களால் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி விரைவுபடுவதுடன் அவர்களின் மகிழ்ச்சியும் நீடிக்கும்.
எதிர்காலத்தில் குழந்தைகள் பெரியவர்களாகி சவால்களை எதிர்கொள்ளும் திறனை அவர்களுக்கு படிப்படியாக உங்களின் சமயோசித செயல்களால் உணர்த்துங்கள்.
உங்களின் குழந்தைகள் எதிர்காலம் உங்கள் கையில்...!

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குழந்தைகளின் எதிர்காலம் உங்கள் கையில்...
» உன் எதிர்காலம் உன் கையில்!
» குழந்தைகளின் எதிர்காலம்
» இளைஞர்கள் கையில் எதிர்காலம்
» உங்கள் வெற்றி உங்கள் கையில்
» உன் எதிர்காலம் உன் கையில்!
» குழந்தைகளின் எதிர்காலம்
» இளைஞர்கள் கையில் எதிர்காலம்
» உங்கள் வெற்றி உங்கள் கையில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum