தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் 12.12.12

Go down

அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் 12.12.12 Empty அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் 12.12.12

Post  amma Sat Jan 12, 2013 12:21 pm



பனிரெண்டு என்றாலே பல அற்புதங்களை ஒரு சேர பெற்றது என பொருள்படும். இம்மாதம் 12-ம் தேதி மாதம் 12 ஆண்டு 12 என 12-12-12 என்ற அற்புதக் கூட்டணியில் வரும் தேதி ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் ஓர் அற்புதம் ஆகும். பல தலைமுறைகளுக்கு முன் நம் பாட்டன் ரசித்த இந்நாளை நாம் இன்று கொண்டாடப் போகின்றோம்.

உலகம் முழுவதும் உள்ள நம் மனித சமுதாயம் இந்நாளை வரவேற்க விழாக் கோலம் பூண்டுள்ளது. இன்று நாம் பெரும் மகிழ்ச்சியைப் போல் நம் வம்சாவழியினர் பெற ஆயிரம் ஆண்டுகள் தவம் இருக்க வேண்டும். பனிரெண்டின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒன்று என்ற சூரியன் இரண்டு என்ற சந்திரன் 12-ல் உள்ளது தந்தையும் தாயும் சேர்ந்து வாழ்த்துவது போல ஆதி மூலகர்த்தாவும், ஆதி சக்தியும் வாழ்த்துவதைப் போல் அமைந்த தேதி 12. அம்மையப்பன் என்பது இதுவே. இதில் ஒன்றும் இரண்டும் சேர்ந்தால் மூன்று என்ற குருவின் ஆதிக்கம் வரும். எனவே மூன்றாம் எண் அமைப்பைப் பெறும். இந்நாளைத் தான் மாதா + பிதா = `குரு' என்கிறோம்.

இம்மூன்றுமே தெய்வ நிலைக்கு வழிகாட்டுவதாக உள்ளது. ஆம் நமக்கு தாயும் தந்தையுமே முதல் குரு. தெய்வத்திற்கு இணையாக நேசிக்க வைக்கும் இந்த எண் 12. இவ்வாண்டின் நிறைவான பகுதியில் பல அற்புதங்களை நமக்கு வழங்கக் காத்துக் கொண்டுள்ளது.

பல முகங்கள் கொண்ட 12.........

தேதி 12 மாதம் 12 ஆண்டு 12. இதில் நள்ளிரவு 12 மணி 12 நிமிடம் 12 நொடி என ஆறு 12ஐக் கொண்ட இந்த நாளின் இந்த நேரம் ஒரு பொன்னான நேரம். அதுவும் பொன் கிடைத்தாலும் கிடைக்காதது புதன் என்பார்கள்.

அப்பேர்பட்ட புதனில் அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, சிம்ம லக்கன நேரத்தில் ராசி நாதன் இரண்டாம் எண் அதிபதி சந்திரனுடன் 1-ம் எண் அதிபதி சூரியனும் சேர்ந்து புதனுடன் ஒரே வீட்டில் கூடி நிற்கும் இவ்வேளையில் 12-ம் எண்ணுக்கு அதிபதியான குரு தனது மையப் பார்வையான 7-ம் பார்வையில் ஆனந்தமாக பார்க்கப்படும் இந்நேரம் ஆண், பெண் அனைவருக்கும் ஆனந்தத்தை தரும் நேரமாக அமைகின்றது.


12-ம் எண் பல கூட்டணிகளுக்கு முத்தாய்ப்பாக உள்ளது. அடியில் 12 இஞ்ச், கணிதத்தில் 1 டஜன், ஏசுவின் சீடர்கள் 12 பேர். ஆழ்வார்கள் 12 பேர், மாதங்கள் 12, (அனைத்து மொழி மாதங்களும் 12) பூமியில் கிரகங்கள் பயணம் செய்ய பாகம் செய்யப்பட்ட ராசிகள் 12. அதன் ஜீவிதமாக உள்ள லக்கினங்கள் 12. இந்த லக்கினங்கள் ஒரே நாளில் 12 பாகங்களை தனக்குள் வரிசைப்படுத்திக் கொள்கின்றன.

குருவின் ஆதிக்கத்தில் 3, 12, 21, 30 என்ற எண்களில் 12 `G' எனும் (ஜி) ஆங்கில எழுத்துக்கு வேகம் தருவது. எனவே தான் Good, God (குட் நன்று; காட் கடவுள்) என்ற தன்மையில் போற்றப்படுகின்றது. தேதி 12+12+12=9 எனவும் மொத்த கூட்டு 2 எனவும் வருவது தனிச்சிறப்பு.

திருமணத்திற்கு உகந்த நேரம்........

12-12-12-ல் உலகில் பல பாகங்களில் இந்நாளில் பல திருமணங்கள் நடக்க உள்ளன. இந்திய நேரப்படி இந்நாளில் திருமணம் செய்ய உகந்த நேரம் 12-12-12 புதன் காலை 6.15 முதல் 7.15 மணி வரையில் உள்ள நேரம் தனுசு லக்கினம் சித்த யோகம் அனுஷ நட்சத்திரம் கூடிய சுப வேளையாக உள்ளது. இவ்வேளையில் திருமணம் செய்ய ஆயிரம் காலத்து பயிராக வாழ்வு சிறக்கும்.

குழந்தைப்பேறு..........

இக்கால கூட்டத்தில் சுப நேரங்களில் குழந்தைப் பேறு என்பது நவீன மருத்துவத்தால் எளிதாக உள்ளது. எனவே நள்ளிரவு 12-12-12-ம் தேதியில் 12 மணி 12 நிமிடம் 12 வினாடிக்குள் என்பது பாப கிரகங்களின் தடைகளைத் தாண்டிய சுத்த லக்னமாகவும். லக்னாதிபதியை குரு பார்ப்பதுமாக அமைகிறது. மற்ற நேரங்கள் அவரவர் ஜாதகத்துக்கு தக்கபடியும் தேர்வு செய்யலாம்.

ஏனெனில் ஆரம்பமும் நிறைவும் 12-ஆக வருவதும் அதாவது 12 ஏ.எம். 12 பி.எம். என்பதில் 12.01 ஏ.எம். ஆகவும். பகலில் 12 பி.எம். என்பது 12 ஆகவே அமைகிறது. சூரியனின் கடுமை நண்பகல் 12 மணி என்றும் சந்திரனின் குளுமை என்பது நள்ளிரவின் 12 மணி என்பதுமாக அமைவது தந்தையின் கண்டிப்பும் தாயின் பாசமுமாக அமைவது அற்புதம் தானே.

ரஜினியும் டிசம்பர் 12-ம்.........

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த தேதி 12. அதிலும் இம்மாதம் இவ்வாண்டின் கூட்டணியில் இவரது பிறந்த நாள் கொண்டாட்டம் ரசிகர்களை அதிகம் மகிழ்ச்சி அடையச் செய்யும். இந்த பிறந்த நாளுக்குப் பின் வரும் அவரது திரைப்படம் உலக அரங்கில் அதிகம் பேசவும் ரசிக்கவும் வைக்கும் படமாக அமையும்.

அதிர்ஷ்ட நாளில் செய்யக் கூடிய காரியங்கள்..........

12-12-12 அதிர்ஷ்ட நாளில் பெயர் சூட்டுதல் காது குத்துதல், அணிகலன்கள், நகைகள் வாங்குதல், கழுத்தில் நகை அணிதல், புதிய கார்கள் வாங்குதல், வாசல் நிலை வைத்தல், திருமணம் போன்ற சுபகாரியங்களை செய்யலாம். இப்படிப்பட்ட இந்த நாள் எண் கணித ராசிப்படி பனிரெண்டு ராசிக்காரர்களுக்கும் தரும் நல்லவைகள் எவை என்பதையும் பார்ப்போம்.

மேஷம்..... மேஷ ராசி அன்பர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்கள் இவர்களுக்கு இந்த நாள் வருமான உயர்வினையும், புதிய பொருள் சேர்க்கையையும் ஏற்படுத்தும். பெண்கள் தங்களது நீண்ட கால நோய்க்கு மருந்து எடுத்துக் கொண்டால் விரைவில் குணமடைவர்.

ரிஷபம்..... ரிசப ராசி நேயர்கள் புதிய கார் இந்நாளில் வாங்க மிகவும் நல்லது. புதிய டெபாசிட்டுகள் துவங்கலாம். புதிய தொழில் முதலீடும் லாபம் தரும். நண்பர்கள் வகையில் பொருளாதார விசயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நலம்.

மிதுனம்...... மிதுன ராசி நேயர்கள் மிகவும் அதிர்ஷ்ட சாலிகள். புதன் ஆதிக்கம் பெற்ற இந்நாளில் எதிர்பாராத பொருள் வரவு ஏற்படும். புதிய பொருள் சேர்க்கை ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். புதிய தொழில் முயற்சி லாபம் தரும்.

கடகம்........ கடக ராசி நேயர்கள் எண்ணிய எண்ணம் நிறைவேறும் நாள். சிறிய அளவிலாவது பொன் நகை வாங்குவது சிறப்பு. தாயார் வழி சொந்தங்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார்கள். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.

சிம்மம்...... சிம்ம ராசி நேயர்கள் மிக்க செல்வாக்கு பெறுவர். இந்த லக்கினத்தில் இந்நாள் உதிப்பது மிகவும் சிறப்பாக உள்ளது. பயணங்களால் அலைச்சலும் உடல் சோர்வும் ஏற்பட்டாலும் நிறைவான பொருளாதார வரவு, புத்தாடை சேர்க்கை மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

கன்னி .... கன்னி ராசி நேயர்கள் மற்றவர்களுக்கு வாக்கு தருவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடுமையான செலவினங்கள் பயமுறுத்தினாலும் அதற்கான பணஉதவி மனைவி வகையில் விற்றுகை கொடுக்கும். அதிக முயற்சியில் ஆதாயத்தை பெறுவீர்கள்.

துலாம்...... துலாம் ராசி நேயர்கள் வீடு மற்றும் இடம் வாங்கும் முயற்சி செய்யலாம். பிறருக்கு கடன் தருவதை தவிர்த்தால் மனக்குழப்பம் மற்றும் சோர்வில் இருந்து தப்பிக்கலாம்.

விருச்சிகம்..... விருச்சிக ராசி நேயர்களின் தேக ஆரோக்கியம் சீரடையும். கடுமையான மன உளைச்சல் இருப்பினும் மைத்துனர் வழி உதவியால் தெம்பு ஏற்படும். மாமனார் வீட்டாரின் வரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெளியூர் பயணத்தில் விழிப்பாக இருந்தால் பயணம் இனிக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சி தரும்.

தனுசு....... தனுசு ராசி நேயர்கள் இறைவழி பாட்டின் மூலம் நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். தந்தை மற்றும் தாயார் வழியில் ஏற்றங்கள் ஏற்படும். நண்பர்களிடம் விளையாட்டாக பேசுவதை தவிர்க்கவும். மனக்குழப்பம் அகல செந்தில் ஆண்டவரை பிரார்த்தனை செய்யவும்.

மகரம்...... மகர ராசி நேயர்களுக்கு பெரியவர்களின் ஆசியுடன் ஆரம்பிக்கும் முயற்சி மிகப் பெரிய வெற்றியை ஏற்படுத்தும் தட்சிணா மூர்த்தியை வழிபட்டு விட்டு செல்லும் காரியம் ஆதாயத்தை அள்ளித்தரும். சோர்வுகள் விலகும்.

கும்பம்....... கும்ப ராசி நேயர்களின் காட்டிலே நல்ல மழை. எடுத்த காரியங்கள் கைகூடும். நீண்ட நாள் சொத்து பிரச்சினைகள் விலகி ஆதாயத்தை அள்ளித்தரும். பணம் பல வழிகளிலும் வந்து பையையும், மனதையும் நிரப்பும்.

மீனம்..... மீன ராசி நேயர்களின் நீண்ட நாள் மனப் போராட்டத்திற்கு ஒரு தீர்வு கிட்டும் நாள். குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தாலும் நிதானத்தால் அதை வெற்றியாக மாற்றலாம்.

உயர்வு தரும் வழிபாடு........

12-12-12 தேதியில் அணிவகுக்கும் பனிரெண்டு சந்திரனின் பொறுப்பில் பூர்த்தியாவதால் குருச்சந்திர யோகத்தை தர உள்ளது. இந்நாளின் யோகங்கள் அனைவருக்கும் கிடைக்க மதுரை சொக்கநாதரை மனதில் தியானித்து மீனாட்சியம்மனுக்கு என வீட்டிலேயே மூன்று நெய் தீபம் கிழக்கு, வடக்கு மேற்கு என வைத்து ஏற்றி உங்களது அனைத்து நல்ல எண்ணங்களும் நிறைவேற மனமுருக பிரார்த்தனை செய்யுங்கள். அனைத்து யோகங்களும் உங்களை வந்தடையும் என்கிறார் வாஸ்து பேராசிரியர் யோகஸ்ரீ மணி பாரதி.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum