யோகாசனத்தின் கட்டுப்பாடுகள்
Page 1 of 1
யோகாசனத்தின் கட்டுப்பாடுகள்
• சாப்பிட்டு குறைந்தது 4 மணி நேரம் சென்ற பிறகும். காபி, டீ, குடித்தால் 1 மணி நேரம் கழிந்த பின்பும் ஆசனங்கள் செய்யலாம்.
• இரவில் நீண்ட நேரம் விழித்திருத்தல், நீண்ட தூரம் பயணம் செய்த நாள், எண்ணெய் தேய்த்து குளித்த நாள் மற்றும் உடல் சோர்வு, தலைவலி, இருக்கும் போதும் ஆசனங்கள் செய்யாது சாந்தி ஆசனம் மட்டும் செய்யலாம்.
• யோகப் பயிற்சி செய்பவர்கள் உருளைக் கிழங்கு மசாலா உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்தல் நலம்.
• வெறும் தரையில் யோகா பயிற்சி செய்யக் கூடாது .
• காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்த பின்பே ஆசனம் பயில வேண்டும்.
• யோகாசனம் செய்யும் முன்போ அல்லது செய்த உடனேயோ குளிப்பது ஏற்றதல்ல.
• வயிற்றில் வலி உடையவர்கள் யோகாசனம் செய்தல் கூடாது.
• தலைவலி இருக்கும் நாட்களில் ஆசனம் செய்ய வேண்டாம்.
• திறந்த வெளியில் அல்லது காற்றோட்டமான அறையில் ஆசனம் செய்தல் வேண்டும். காபி, டீ, புகையிலை, லாகிரி வஸ்துகள், மது அறவே கூடாது.
• யோகாசனம் செய்யும் போது வேறு உடற்பயிற்சி கூடாது.
• இதய நோயுள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர் ஆலோசனையுடன் யோகாசனத்தைத் தேர்வு செய்து செய்தல் நன்று.
• யோகாசனத்தைத் தினமும் அரை மணி முதல் இரண்டு மணி வரை செய்து பழகலாம்.
• யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் இரண்டு நிமிடம் அமைதியாக பத்மாசனம் (அ) சுகாசனத்தில் அமரவும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» யோகாசனத்தின் கட்டுப்பாடுகள்
» யோகாசனத்தின் கட்டுப்பாடுகள்
» யோகாசனத்தின் நன்மைகள்
» யோகாசனத்தின் நன்மைகள்நன்மைகள்
» யோகாசனத்தின் அவசியம்..
» யோகாசனத்தின் கட்டுப்பாடுகள்
» யோகாசனத்தின் நன்மைகள்
» யோகாசனத்தின் நன்மைகள்நன்மைகள்
» யோகாசனத்தின் அவசியம்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum